பர்சனல் லோனில் வீடு... வரிச் சலுகை கிடைக்குமா?

? ஐந்து லட்ச ரூபாய் பர்சனல் லோன் வாங்கி வீடு வாங்கியிருக்கிறேன். திரும்பச் செலுத்தும் அசல் மற்றும் வட்டிக்கு வரிச் சலுகை கிடைக்குமா?

செந்தில்,

ச.ராம் ரெட்டி, ஆடிட்டர்.

“பிரிவு 80சி-ன் கீழ் அசல் தொகை கழிவு பெற வரையறுக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வீட்டுக்கடன் பெற்றிருக்க வேண்டும். மாறாக, பிரிவு 24(B)-ல் வீட்டுக் கடன் என்கிற வார்த்தை பயன்படுத்தவில்லை, ஆனால், நீங்கள் வாங்கும் கடன் வீடு கட்டவோ அல்லது புனரமைக்கவோ பயன்படுத்தியிருக்க வேண்டும்.

ஆகையால் உங்கள் வங்கியில் இருந்து ‘நீங்கள் வாங்கிய கடன் வீடு கட்டத்தான் பயன்பட்டது’ என சான்றிதழ் பெறும்பட்சத்தில் நீங்கள் கட்டிய வட்டிக்கு பிரிவு 24 (B)-ன் கீழ் கழிவு பெறலாம். மாறாக, அசல் தொகைக்கு எவ்வித வரிச் சலுகையும் பெற இயலாது.”

? என் பெயரில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறேன். என் அம்மாவை நாமினியாக நியமித்திருக்கிறேன். நான்தான் பிரீமியம் செலுத்துகிறேன். என் கணவருக்கு 80சி-ன் கீழ் வரிவிலக்கு கிடைக்குமா?

நிர்மலா,

சிஏ. ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ், ஈரோடு.

“யார் ஆயுள் காப்பீடு பாலிசி பிரீமிய தொகையை செலுத்துகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே 80சி-ன் கீழ் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000 வரை வருமான வரிக்கழிவு கிடைக்கும். மேலும், வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி-ல் நாமினி தொடர்பாக எந்த நிபந்தனையும் இல்லை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்