அரசு ஊழியர் வீட்டுக் கடன்... நல்ல தருணத்தை நழுவ விடாதீர்கள்!

பி.முகைதீன் ஷேக் தாவூது

ருமானத்துக்கு தகுந்த மாதிரி வாடகை வீடு கிடைத்தால் போதும் என்ற சிந்தனை மாறி, நமக்கும் சொந்தமாக ஒரு வீடு இருந்தால் சுதந்திரமாக வாழலாம் என்ற சிந்தனை பெருகிவிட்ட காலகட்டமிது. அதனால்தான் நடுத்தரவாசிகள் கடன் வாங்கியாவது புறநகர் பகுதிகளில் சிறிய அளவில் வீட்டினை வாங்கிக் கொள்கிறார்கள். இப்போது அனைவருக்கும் வீடு என்பதில் அரசும் முனைப்பாக உள்ளது. வீட்டுக் கடன் பெறுவதற்கு வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் என எத்தனையோ வழிகள் உள்ளன.

ஆனால், அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, அரசுக் கடன் பெற்று வீடு கட்டுவதே சிறப்பு.  ஊதியக் குழு பரிந்துரைகள் அமலாக்கம் செய்யும் தருணமிது. கட்டுமானச் செலவும் நாளுக்கு நாள் ஏறி வருகிறது. இனியும்  தாமதிக்காமல் உடனே வீடு கட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டுக் கடன் பெற தகுதி!

ஆறு ஆண்டுகள் பணி நிறைவு செய்திருக்க வேண்டும். சொந்த மனை இல்லாதவர்கள் மனை வாங்கவும், வீடு கட்டவும் சேர்த்தே விண்ணப்பிக்கலாம்.

கையிருப்பில் மனை!


கையில் பணம், நகை இருப்பின்  அதைக் கொண்டும் மனை வாங்கலாம். ஆனால், பணம், நகை இருப்புப் பற்றி, அசையும் சொத்து பற்றிய தகவல் தெரிவிப்பதற்கான படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

சேமநிதி கடன் (Provident Fund)!

சேமநிதியில் கடன் பெற்றும் வீட்டுமனை வாங்கலாம். அதிக பட்சம் ரூ.9 லட்சம் வரை இதில் கடன் கிடைக்கும். ஆனால், வீடு கட்டக் கடன் கோரி விண்ணப்பித் திருந்்தால், அந்தக் கடன் தொகையும், சேமநிதியிலிருந்து கடனாகப் பெறப்பட்ட தொகை யும் சேர்ந்து ரூ.25 லட்சத்துக்கு மிகையாக இருக்கக் கூடாது.

பூர்வீக வீட்டு மனை!


பூர்வீகச் சொத்தாக உள்ள வீட்டு மனையில் வீடு கட்ட கடன் பெறலாம். மேற்கண்ட சொத்து பற்றிய விவரம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். புதிதாகப் பெற உத்தேசிக்கும் சொத்துக்கு அலுவலகத் தலைவர் / நியமன அலுவலர் / துறைத் தலைவரின் அனுமதி பெற வேண்டும்.

மனைவி பெயரில் மனை!

மனைவி பெயரில் உள்ள மனையில் வீடு கட்டலாம். கடன் பெற்று வீடு கட்டுவதற்கான ஒப்புதலை, ரூ.20 முகமதிப்பு கொண்ட முத்திரைத்தாளில் பதிவு செய்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பாதி கட்டிய வீடு!

வீடு கட்ட ஆரம்பித்து, நிதிப் பற்றாக்குறையால் பாதியில் நிற்கும் வீட்டை கட்டி முடிக்க கடன் கோரலாம்.  தேவையான கடனுக்கு உரிய மதிப்பீட்டுடன் விண்ணப்பிக்கலாம்.

மேம்பாட்டுக்குக் கடன்!

வீட்டில் மாடி கட்ட, மாற்றி அமைக்க, விரிவுப்படுத்த என இதற்கெல்லாம் வீட்டுக் கடன் வாங்கலாம். அதிகபட்ச வீட்டுக் கடனுக்கு உட்பட்டிருக்கும் கடன் தொகை கிடைக்கும்.

தனிப்பட்ட முறையில் கடன்!

வீட்டுக் கடன் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ள நிலையில், காலம் கருதி, தனிப்பட்ட முறையில் கடன் பெற்று  வேலையைத் துவங்கலாம்.

கால அவசரம் கருதி பெற்ற கடனை, அரசுக் கடன் கிடைத்த தும் முழுமையாக திருப்பித் தந்து விடுவதாக எழுத்து மூலமான உறுதிமொழியைச் சமர்ப்பிக்க வேண்டும். அடமானப் பத்திரம் எழுதித் தரவேண்டும்.

எங்கும் கட்டலாம்!

பணிபுரியும் இடத்தில்தான் வீடு கட்ட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஓய்வுபெற்றபின் வசிக்க விரும்பும் ஊரில் வீடு கட்டலாம். ஆனால், மனை எந்த ஊரில் உள்ளதோ அந்த மாவட்ட ஆட்சியர்தான் கடனைத் தர உத்தரவிட  வேண் டும். விண்ணப்பத்தை மனை அமைந்துள்ள மாவட்ட ஆட்சி யருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டி முடித்த வீடு!


கட்டி முடித்து விற்கப்படும் வீட்டினை வாங்கவும் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். வீட்டு வசதி வாரியம் கட்டி விற்கும் ஆயத்த வீடு மட்டுமன்றி, தனியார் கட்டித் தரும் வீடு வாங்கவும் கடனுக்கு விண்ணப் பிக்கலாம்.

பழைய வீடு!

பழைய வீடு வாங்கலாமா என்ற கேள்வி கேட்பவர்களுக்கு,  வாங்கலாம். வீட்டின் ஆயுளைப் பொறுத்து வீடுகள் நான்கு பிரிவாக உள்ளன. ஒவ்வொரு வகை வீடும் எத்தனை ஆண்டு பயன்பாட்டில் இருக்கும் என்பதற்கான அளவீட்டின்படி கடன் தொகை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படலாம். பொதுப்பணித் துறையின் கட்டடப் பிரிவு செயற் பொறியாளர் வழங்கும் சான்றின் அடிப்படையில் கடன் தொகை இறுதி செய்யப்படும்.

கணவன், மனைவிக்கு கடன்!


கணவன், மனைவி இருவருமே அரசுப்பணியில் இருந்தால் இரு வரும் கடன் பெறலாம். ஆனால், இருவரும் இணைந்து ஒரு வீட்டுக்குத்தான் கடன் பெறலாம். இருவரில் ஒருவர் பெயரில் கடன் வழங்கப்பட்டு, அவரிடம் பிடித்தம் தொடரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்