நாணயம் லைப்ரரி: நீங்களும் ஆகலாம் பிசினஸ் கிங்!

புத்தகத்தின் பெயர் : வாட் ஐ விஷ் ஐ நியூ வென் ஐ வாஸ் 20

ஆசிரியர் :
டீனா சீலிங்

பதிப்பாளர் : HarperOne

ந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டியில் தொழில் முனைவு பிரிவில் பேராசிரியையாக இருக்கும்  டீனா சீலிங் எழுதிய ‘வாட் ஐ விஷ் ஐ நியூ வென் ஐ வாஸ் 20’. இந்த உலகில் தொழில் ரீதியாக உங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகம் இது. முன்னுரை, அறிமுக உரை என்ற எதுவுமின்றி நேரடியாக சப்ஜெக்ட்டுக்குள் செல்கிறது இந்தப் புத்தகம்.

தொழில்முனைவு பயிலும் மாணவர்களுக்கு ஒரு  பயிற்சிப் பாடமாக கொடுத்த ஒரு விஷயத்துடன் ஆரம்பிக்கிறார் ஆசிரியை.  அதிகபட்சமாக நான்கு நாட்கள் டைம். ஐந்து டாலர்களை ஒரு கவரில் போட்டு ஓட்டிக் கொடுத்து  இந்த நான்கு நாட்களுக்குள் இந்த கவரை  பிரித்ததில் இருந்து இரண்டு மணி நேரத்துக்குள் இந்த ஐந்து டாலரை வைத்துக்கொண்டு தொழில் ஏதாவது செய்து சம்பாதித்துக் காட்டுங்கள் என்பதுதான் அந்த பயிற்சிப் பாடம்.

தொழிலுக்கான வாய்ப்புகள், உங்கள் எதிர்பார்ப்புகளில் இருக்கும் சவால்கள், கையில் இருக்கும் குறைந்த பணத்தை எப்படி லாபகரமாகவும் கிரியேட்டிவ்வாகவும் பயன்படுத்துவது என்பதுதான் பயிற்சிப் பாடத்தின் நோக்கமே.

இது குறித்து வகுப்பறையில் சொல்லிக் கருத்து கேட்டபோது மாணவர்கள், ஐந்து டாலர்தானே! அதைக்கொண்டு போய் லாட்டரி டிக்கெட்டோ அல்லது சூதாட் டத்தில் கட்டி விளையாடுவோம்  என்றார்களாம்.  மிகக் குறைந்த அளவு பணம் தானே! அதனை இழந்தால் என்ன என்பது சிலரது மனநிலையாக இருந்ததாம்.

சிலரோ, ஒரு சின்ன லெமன் ஜூஸ் கடையோ அல்லது பக்கெட் மற்றும் துணிகள் வாங்கி கார் கழுவித் தரும் வேலையை செய்யலாம் என்றனராம்.  இது சிறிய பணத்தைப் போட்டு சிறிய தொழிலை செய்யும் மனநிலை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்