கேட்ஜெட்ஸ்

கார்த்தி

ஹெச்டிசி 10 (HTC 10)

சோனி, சாம்சங் வாடிக்கையாளர்கள் பட்ஜெட் ரக ஆண்ட்ராய்டு மொபைல்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினாலும், ஹெச்டிசி வாடிக்கையாளர்கள் மட்டும் அந்த நிறுவனத்தின் மீது அதீத அன்பு வைத்திருக்கிறார்கள்.  காரணம், அதன் துல்லியமான ஒலித்திறன்தான். 5.2 இன்ச் ஸ்கிரீன், 564 ppi பிக்ஸல் தரம், கோல்கம் ஸ்நேப்டிரேகன் 820 கோட்கோர் 64 பிட் 2.2GHz பிராசஸர் என அசத்தலாக வந்திருக்கிறது இந்த போன். 32 ஜிபி இன் பில்ட் மெமரியுடன் வரும் இந்த மொபைலில் 2 டிபி வரை எக்ஸ்டெர்னல் மெமரியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என உறுதி அளிக்கிறது ஹெச்டிசி நிறுவனம். ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மென்பொருளில் இந்த மொபைல் இயங்குகிறது.

ஒலித்திறனுக்காக ஹெச்டிசியின் பூம்சவுண்டு தொழில்நுட்பமும், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 மெகாபிக்ஸல் ரியர் கேமராவும், 5 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமராவும் பொருத்தப்பட்டு இருக்கிறது, இதன் ஃபிரன்ட் கேமராவில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) இருப்பதால், செல்ஃபிக்களை சிறந்த கிளாரிட்டியில் எடுக்கலாம். 

மொபைல் 4 ஜிபி ரேமுடன் வருவதால், எந்தவித தடையும் இல்லாமல், மொபைல் ஸ்மூத்தாக வேலை செய்கிறது.   3000 mAh பேட்டரியில், இந்த மொபைல் இயங்குகிறது. ஃபிங்கர் பிரின்ட் சென்சாருடன் வரும் இந்த மொபைலின் மிகப் பெரிய குறை, டூயல் சிம் இல்லை என்பதுதான்.

பிளஸ்

அட்டகாசமான டிசைன்
சிறப்பான மென்பொருள்
சிறந்த திறன்
ஆடியோ தரம்

மைனஸ்

FM ரேடியோ இல்லை
விலை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்