காசோலை... அறிந்ததும் அறியாததும்!

ந.ஆசிபா பாத்திமா பாவா

காசோலை எனப்படும் செக் பற்றி நம் எல்லோருக்குமே கண்டிப்பாகத் தெரியும். வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத் துக்கோ ரொக்கப் பணம்  செலுத்து வதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவிதான் செக்.

தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கும் பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்துக்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம்.  காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம். இந்த காசோலையில் பல  வகைகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இப்போது தெரிந்து கொள்வோமா?

காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கிய தகவல்கள்!

ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும் (Drawee). காசோலையில் கொடுப்பவர், அதாவது விநியோகிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம் பெற வேண்டும்(Drawer). காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும் (Payee). எவ்வளவு பணம் என்பதை வார்த்தைகளில் கண்டிப்பாக குறிப்பிட  வேண்டும். கண்டிப்பாக தேதி குறிப்பிட வேண்டும்.

இடத்தை மையப்படுத்தி காசோலைகளின் வகைகள்!

உள்ளூர் காசோலை (Local cheque): பணம் பெறுபவர் வசிக்கும் அதே ஊரிலுள்ள வங்கியில் காசோலை வழங்கப் பட்டால், அது உள்ளூர் காசோலை எனப்படும்.

வெளியூர் காசோலை (Outstation cheque):
ஒரு குறிப்பிட்ட நகரின் உள்ளூர் காசோலை, பிற இடங்களில் வழங்கப்படு கிறது என்றால் அது வெளியூர் காசோலை எனப்படும். இந்த காசோலைகளைப் பயன்படுத்து வதன் மூலம், வங்கிகள் நம்மிடம் இருந்து நிலையான கட்டணங்களை வசூலிக்கலாம்.

சம காசோலை (At Par cheque):
இது நாடு முழுவதும் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும் இணையாக ஏற்கப்படுகின்ற ஒரு காசோலை. உள்ளூர் காசோலை போல கூடுதல் வங்கிக் கட்டணங்களை ஈர்க்காமல் நாடு முழுவதும் இந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மதிப்பின் அடிப்படையில் காசோலையின் வகைகள்!

சாதாரண மதிப்புடைய காசோலைகள் (Normal Value Cheque): ரூ. 1 லட்சத்துக்கும்  கீழ் மதிப்புடைய காசோலைகள் சாதாரண மதிப்புடைய காசோலை எனப்படும்.

உயர் மதிப்புடைய காசோலை கள் (High value cheque):
ரூ. 1 லட்சத்தை விட அதிகளவு மதிப்புடைய காசோலைகள் உயர் மதிப்பு காசோலைகள் எனப்படும்.

பரிசு காசோலைகள் (Gift Cheque):
அன்புக்குரிய  வர்களுக்கு பரிசாகக் கொடுக்கும் காசோலைகள் பரிசு காசோலைகள் எனப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்