கபாலி புரமோஷன்: கற்றுத் தரும் பிசினஸ் பாடங்கள்!

சோ.கார்த்திகேயன்

துவரைக்கும் வந்த தமிழ் திரைப்படங்கள் ஏற்படுத்தாத பரபரப்பை ‘கபாலி’ ஏற்படுத்தி இருக்கிறது. பல பிசினஸ் நிறுவனங்கள் ‘கபாலி’யுடன் இணைந்து பல புதிய பிசினஸ் முயற்சிகளை செய்திருப்பது தமிழ் சினிமா உலகம் இதுவரை காணாத காட்சி. ‘கபாலி’யைக் கச்சிதமாக புரமோஷன் செய்ததன் மூலம் நடக்கும் பிராண்டிங்கும் பிசினஸும் உண்மையிலேயே ஆராயத்தக்கவை. ‘கபாலி’ எப்படியெல்லாம் புரமோஷன் செய்யப்பட்டது என்பது குறித்து சினிமா தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனிடம் கேட்டோம்.

ரஜினியால் மட்டுமே சாத்தியம்!

“பல நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒரு பிராண்ட் (கபாலி) இவ்வளவு பெரிய அளவில் பேசப்படுகிறது என்றால் அது ரஜினியால் மட்டுமே சாத்தியம். வேறு எந்த ஒரு பிராண்டாலும் இத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ரஜினி, இதுவரை எந்த ஒரு நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துகொண்டதில்லை. இந்தப் படத்தில் இதுபோன்ற வாய்ப்பு கிடைத்துள்ளதால், பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இணைந்துள்ளன.

ஒவ்வொரு நிறுவனத்தின் விளம்பரங்களிலும் ரஜினியின் படத்தை வைத்தே விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஏர் ஏசியா விமானத்தில் அவருடைய படம் ஒட்டப்பட்டுள்ளது. முத்தூட் நிறுவனத்தின் சில்வர் காயின்களிலும் ரஜினி இருக்கிறார். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளையோ, பொருட்களையோ ரஜினி விளம்பரப்படுத்தப் போவதில்லை. ஆனாலும் அவருடைய படத்தை வைத்து பல நிறுவனங்கள் விளம்பரம் செய்கிறது. இது எல்லாருக்கும் ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதனால் ஏர்ஏசியா, ஏர்டெல், அமேசான், சாப் சிஜே, கேட்பரி என பல நிறுவனங்கள் ‘கபாலி’யுடன் இணைந்துள்ளன. இது இந்தப் படத்துக்கு ஒரு நல்ல புரமோஷனாக அமைந்துள்ளது. ‘கபாலி’ திரைப்படம் உலக அளவில் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் இந்த பிராண்ட்டிங்தான்.

இந்தப் படத்தை பொறுத்தவரை, தயாரிப்பாளரின் கையை மீறியே பல விஷயங்கள் நடந்துள்ளன. முதலில், இந்தப் படத்தின் டீசரிலேயே ஒரு மேஜிக் ஏற்பட்டது. ஒரு கோடி பேரிடம் இந்த டீசர் ரீச்சாகும் என்று எதிர்பார்த்தால், அது 2.5 கோடியாக ரீச்சாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்