தைரியம் தந்த டெக்னிக்கல் அனாலிசிஸ்!

மு.சா.கெளதமன்

டந்த ஜூலை 16 மற்றும் 17-ம் தேதி சென்னையில் நாணயம் விகடன் நடத்திய இரண்டு நாள் டெக்னிக்கல் அனாலிசிஸ் கட்டணப் பயிற்சி வகுப்பில் பல டிரேடர்களும் வாசகர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சென்னை மட்டுமின்றி, கடலூர், விழுப்புரம், விருதுநகர், கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி என்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் வாசகர்கள் கலந்துகொண்டனர். எக்ட்ரா பயிற்சி மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளித்தார்.

மைண்ட் செட் முக்கியம்!

முதலில் நீங்கள் ஒரு டிரேடரா அல்லது முதலீட்டாளரா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு டிரேடர்தான் எனில், மைண்ட் செட் முக்கியம். மூளை சொல்லும் விஷயத்தைத்தான் நாம் முடிவாக எடுக்கிறோம். இந்த மைண்ட் செட் ஒரு டிரேடருக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை  உதாரணங்களுடன் விளக்கினார். அதேபோல் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்கும் ஒரு அருமையான சூத்திரம் மூலம் ஒவ்வொருவரையும் சொல்ல வைத்தார். ஒரு நாளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டால் நிச்சயம் அதற்கு மேல் டிரேட் செய்யக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.

சப்ரஸ்!

சப் - சப்போர்ட், ரஸ் - ரெசிஸ்டன்ஸ் ஆகிய இரு வார்த்தைகள் சேர்ந்த வார்த்தை தான் இது. கேன்டில் ஸ்டிக், பார் சார்ட், லைன் சார்ட் என்று எந்த சார்ட்டாக இருந்தாலும் சரி, பங்கு, கமாடிட்டி, ஃப்யூச்சர்ஸ், ஆஃப்ஷன், கரன்சி என்று எதில் வர்த்தகம் மேற்கொள்வதாக இருந்தாலும் சரி, இந்த சப்ரஸ் முக்கியம். இந்த சப்போர்ட் - ரெசிஸ்டன்ஸை வைத்துக் கொண்டுதான் சரியான டார்க் கெட், ஸ்டாப்லாஸ்களை நிர்ண யிக்க முடியும் என்பதை உதாரணங்களோடு காட்டினார் பயிற்சியாளர் அருள்ராஜன்.

கேன்டில் ஸ்டிக்கை!

நேற்று வர்த்தகம் செய்யத் தொடங்கிய புதிய டிரெடர்கள் தொடங்கி பல ஆண்டுகளாக சந்தையிலேயே திளைக்கும் அனலிஸ்ட்டுகள் வரை பயன் படுத்தும் ஒரு சாதனம் கேன்டில் ஸ்டிக் சார்ட். இந்த சார்ட்டின் அடிப்படை தொடங்கி அதில் உருவாகும் கேன்டில்களுக்கு என்ன மாதிரி யான பலம், பலவீனங்கள் உண்டு, அதில் ஏற் படும் பேட்டன் கள், டிரெண்டுகள் மற்றும் டிரெண்ட் ரிவர்சல்கள் என்று பலவற்றையும் விளக்கி னார். அவற்றை நடைமுறையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பங்குகளை வைத்து கணக்கிட்டுக் காட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்