பணம் சம்பாதிக்க பங்குச் சந்தையில் டிரேடிங் செய்யலாமா?

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

வாழ்க்கையில் நாம் நினைப்பது எல்லாவற்றையும் நிஜமாக்கிக்கொள்ள முடியுமா..? முடியாது என்பவர்கள் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. முடியும் என்பவர்கள் முடிந்தவரை களத்தில் குதிக்கிறார்கள். முழுமையாக இல்லாவிட்டாலும் பாதியளவாவது நினைத்ததை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். அப்படி பாசிட்டிவ்வாக நினைப்பவர்கள்தான் எதிர்காலத்துக்காக முதலீடு செய்ய தயாராகிறார்கள். அந்த பாசிட்டிவ் மனிதர்களில் ஒருவர்தான் ஜெயக்குமார்.

சென்னையைச் சேர்ந்த ஜெயகுமாருக்கு இப்போது 31 வயது. இவர் தற்போது கொல்கத்தாவில் மத்திய அரசின் ஊனமுற்றோருக்கான மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்...

‘‘கொல்கத்தாவில் 2014 முதல் பணியாற்றி வருகிறேன். குடும்பத்துடன் அரசுக் குடியிருப்பில் வசிக்கிறேன். என் மனைவி பார்வதி, இந்தியில் பட்டம் பெற்றவர். குழந்தை வளர்ந்ததும் அடுத்த மூன்று வருடங்களுக்குப் பிறகு பணிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். எங்கள் மகன் ஹர்ஷ்வர்தனுக்கு இரண்டரை வயது. அடுத்த வருடம் எல்கேஜி சேர்க்க வேண்டும்.

எனக்குப் பிடித்தங்கள் போக ரூ.41,500 சம்பளம் கிடைக்கிறது.  சேமிப்பு, முதலீடு உள்பட குடும்பச் செலவுகள் மொத்தம் ரூ.26,000 ஆகிறது. மீதம் ரூ.15,500 இருக்கும். இந்தப் பணத்தை அப்படியே பேங்கில் போட்டு வைத்துவிடுகிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்