ஃபிக்ஸட் டெபாசிட் மீது கடன்: லாபமா, நஷ்டமா?

லதா ரகுநாதன். ஆடிட்டர், எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை.

 

ன்றைக்கு கையில் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று பணம் வைத்திருப்பவர்கள் அதை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு, அதன் மீது கடன் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பல வங்கிகளின் பேலன்ஸ்ஷீட்டை அலசும்போது இதை புள்ளிவிவரங்களுடன் புரிந்துகொள்ள முடிகிறது. தனிநபர்களுக்கு அவசர காலத்தில் இந்த ஃபிக்ஸட் டெபாசிட் கடன் உதவி செய்வதாக இருந்தாலும், அது லாபகரமானதா என்பதை பலரும் யோசித்துப் பார்ப்பதே இல்லை.

நமக்கு திடீரென்று அவசரச் செலவு ஏற்படும்போது, நாம் முதலில் கை வைப்பது வங்கியில் போட்டு வைத்திருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டைத்தான்.  அவசரச் செலவுக்காக டெபாசிட் பணத்தை முழுமையாக எடுத்துக் கொள்வது ஒரு வழி. டெபாசிட் செய்த பணத்தை எடுக்காமல், அதை அடமானமாக வைத்து கடன் பெறுவது இன்னொரு வழி. பெரும்பாலோர் இந்த இரண்டாவது வழியைத்தான் பின்பற்றுகிறார்கள்.

டெபாசிட்டை அடமானமாக வைத்து கடன் பெறும்போது முழுத் தொகையும் கடனாக கிடைக்குமா என்று கேட்டால், கிடைக்காது. உங்கள் டெபாசிட் தொகையில் 70% முதல் 90% வரை மட்டுமே கடனாக கிடைக்கும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். இப்படி கொடுக்கப்படாமல் நிறுத்தப்படும் தொகை மார்ஜின் என்று கூறப்படும். அது டெபாசிட்டாகவே தொடரும். உதாரணத்துக்கு, உங்கள் டெபாசிட் ஒரு லட்சம் என்றால் ரூ.70,000 -ரூ. 90,000 வரை கடனாக எடுக்க முடியும். அதற்கான வட்டி விகிதம் உங்கள் டெபாசிட் வட்டியைவிட 2% அதிகம். உதாரணமாக, நீங்கள் செய்த டெபாசிட்டுக்கு  வட்டி 7% என்றால், அதன் மீது நீங்கள் வாங்கும் கடனுக்கு 9% வட்டி. அதாவது, உங்கள் பணத்தை நீங்களே பயன்படுத்திக் கொள்ள 2% அதிக வட்டி தரவேண்டும்.

கடனாகப் பெற்றது போக வங்கி டெபாசிட்டில் உள்ள பணத்துக்கு வட்டி கைக்கு கிடைக்காது.  அது உங்கள் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டிக்காக பயன்படுத்தப்படும். அதாவது, உரிய காலத்தில் கடன் அடைக்கப்படாமல் இருந்தால், மீதமிருக்கும் டெபாசிட் பணம் வட்டியாக எடுத்துக் கொள்ளப் பட்டு கடன் அடைக்கப்படும். 

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் டெபாசிட் செய்த தொகையில் 70,000 ரூபாயை மட்டும் நீங்கள் எடுத்து பயன்படுத்திக் கொண்டிருக் கிறீர்கள். டெபாசிட் மீது கடன் வாங்காமல், மொத்த பணத்தையும் எடுத்து டெபாசிட்டை குளோஸ் செய்திருந்தால், ரூ.30,000-மும் உங்களுக்குக் கிடைத்திருக்கும். அதை வேறொரு டெபாசிட்டில் போட்டிருந்தால் அதற்கு வட்டியும் உங்களுக்கு கிடைத்தி ருக்கும்.

இதை எல்லாம் புரிந்துகொள் ளாமலே, பலரும் டெபாசிட் மீது கடன் வாங்குகிறார்கள். காரணம், உடனே பணம் கிடைப்பதுதான். கிரெடிட் ரேட்டிங் போன்ற சிக்கல் எதுவும் கிடையாது.

அப்படியானால், டெபாசிட் மீதான கடன் வாங்கவே கூடாதா என்று நீங்கள் கேட்கலாம்.

வாங்கலாம், உங்கள் பணத் தேவை மிகக் குறுகிய காலத்துக்கானதாக இருந்தால் மட்டுமே. ஒரு சில மாதங்களில் வரப்போகும் பண வரவை வைத்து கடனை அடைத்துவிட முடியும் எனில் இந்தக் கடனை வாங்குவதில் தவறில்லை.  

தவிர, டெபாசிட்டை முன்கூட்டியே குளோஸ் செய்வதால், வட்டி விகிதம் (Foreclosure charges) 2% வரை குறைக்கப்படும். முன்சொன்ன உதாரணத்தை வைத்துப் பார்ப்போம். ரூ.1 லட்சம் டெபாசிட். வட்டி 8.50%. மூன்று ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ததை ஒரே வருடத்திலேயே குளோஸ் செய்தால், அதற்கான வட்டி 8.50% அல்ல, 7.50% மட்டுமே தரப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்