எதிர்பார்ப்பில் ஜிஎஸ்டி... கவனிக்க வேண்டிய 10 பங்குகள்!

மு.சா.கெளதமன்

றக்குறைய   கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது ஜி.எஸ்.டி. என்று சொல்லப்படும்  சரக்கு மற்றும் சேவை வரி. நாடாளுமன்றத்தின்  இந்தக் கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதாவை சட்டமாக மாற்ற மத்திய அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அரசின் இந்த முயற்சி கூடிய விரைவில் நிறைவேறினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்கிற சூழ்நிலையே தற்போது இருக்கிறது.

ஜிஎஸ்டி சட்டமாக வந்தால், எந்த மாதிரியான நிறுவனங்கள் லாபம் அடையும் என மும்பையை சேர்ந்த ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் ஹெட் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘பொருட்கள் மற்றும் சேவைகள்  மீது விதிக்கப்படும் மறைமுக வரிகளுக்கு மாற்றாக உருவாக்கப்படும் ஓர் ஒருங்கிணைந்த வரி வசூலிக்கும் முறையே ஜி.எஸ்.டி.  இத்தனை காலம் ஒரு பொருளுக்கு அல்லது சேவைக்கு மறைமுகமாக வசூலித்துவந்த கலால் வரி, சேவை வரி, வாட் வரி போன்றவைகள் ஒரே வரியாக வசூலிக்கப்படும்.

வரிகளை மொத்தமாக சேர்த்து வசூலிப்பதால் பிசினஸ் செய்பவர்கள் மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி என்று அலையத் தேவையில்லை. குறிப்பாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ததிலிருந்து, அதை விநியோகம் செய்து விற்பனை செய்வது வரை பல கட்டங்களில் வரி கட்டத் தேவையில்லை என்பதே ஜி.எஸ்.டியின் சிறப்பம்சம்.

இப்போதைய பிரச்னை என்ன?


தற்போது உள்ள நடைமுறைப்படி, ஒவ்வொரு வகையான வரிக்கும், வரிக் கணக்கீடுகளும், வரி செலுத்த வேண்டிய இடங்களும் வெவ்வேறாக இருக்கிறது. இப்படி வரி வசூலிப்பதற்கான சட்டங்கள், கணக்கீடுகள் மற்றும் தனித்தனியான அரசுத் துறைகள் என்று பிரிந்து கிடப்பதால் பிசினஸ் செய்பவருக்கும் அரசுக்கும் கூடுதல் செலவு ஏற்பட்டு பொருளின் மொத்த விலை அதிகரிக்கிறது.

இப்படி விலை அதிகரிப்பதோடு மட்டும்  இல்லாமல் அரசுக்கும் பிசினஸ் செய்பவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழும்போது, சட்டச் சிக்கல்கள் இன்னும் அதிகமாகிறது. இதனால் வரி சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைகளும் நீதிமன்றங்களில் அதிகரித்த வண்ணமே இருப்பதை நாம் பார்க்கிறோம்.

முதன்மைப் பொருளாதார ஆலோசகர் பரிந்துரை!


இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரின் தலைமையில் ஜி.எஸ்.டி மூலமாக பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கலாம் என்று ஒரு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் மூன்று வகையான  வரி விதிப்புகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவதாக, தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் உட்பட அடிப்படைப் பொருட்களுக்கு 12% வரி பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு ‘லோ ரேட் டாக்ஸ்’  என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, ஸ்டாண்டர்ட்டு ரேட் என்கிற பெயரில் 17 - 18% வரி விதிக்க பரிந்துரைத்திருக்கிறார்கள்.

மூன்றாவதாக, சொகுசுப் பொருட்கள் மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கு 40% வரை வரி விதிக்க பரிந்துரைத்திருக்கிறார்கள்.

மதுபானம், பெட்ரோல், டீசல் மற்றும் புகையிலை போன்ற பொருட்கள் ஜி.எஸ்.டி.யின் கீழ் வரவில்லை.

ஜி.எஸ்.டி-க்கு பிறகு!


 ஒரு பொருள் தயாரிக்கப்படுவது தொடங்கி பல கைகள் மாறி நுகர்வோரை அடைகிறது. இப்படி கைகள் மாறும்போது தேவை இல்லாமல் வரி கட்டுவது இந்த ஜி.எஸ்.டியால் தடுக்கப்படும் என்பது ஒரு பக்கம். ஆனால், நுகரப்படும் பொருட்கள் அனைத்துக்கும் வரி கட்ட வேண்டி இருக்கும். அதாவது, நேர் வழியில் சட்டப்படி பிசினஸ் செய்யாதவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, வரிக் கணக்குகள் சரியாகக் கையாள வேண்டிய சூழ்நிலை உருவாகும். அத்துடன்,  பிசினஸில் ஒவ்வொரு செயல்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் சமர்பிக்க வேண்டி இருக்கும். அப்போது தான் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சரியாக கைமாறி இருக்கிறதா அல்லது நுகரப்பட்டு இருக்கிறதா என்பதை பார்க்க முடியும். அதைப் பொறுத்துதான் வரி கணக்கிடப்படும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்