ஷேர்லக்: நிஃப்டி மேலே 500, கீழே 500

வெள்ளிக்கிழமை இரவு பாண்டியன் ரயிலில் மதுரை செல்ல ரிசர்வேஷன் செய்திருந்தார் ஷேர்லக். எனவே, ஏழு மணிக்கு நம் அலுவலகத்துக்கு வந்தவர் பரபரவென செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். முதலில் நாம் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்று கேட்டோம்.

‘‘நிஃப்டி 8500 என்கிற முக்கியமான லெவலை விட்டுக் குறையாமல் இருக்கிறது. ஜி.எஸ்.டி. மசோதாவை இந்தக் கூட்டத் தொடரிலேயே சட்டமாக்க பிரதமர் மோடியே களத்தில் இறங்கி வேலை பார்க்கிறார்். கிட்டத்தட்ட 55 சதவிகித   எம்.பி.க்கள் இந்த மசோதாவை சட்டமாக்க ஆதரவு தெரிவிக்கத் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆக, ஜி.எஸ்.டி. குறித்து வரும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் தகவல்கள்தான் சந்தையை கணிசமாக மேலேயோ அல்லது கீழேயோ கொண்டு செல்லும். தவிர, நம் பொருளாதாரம் நல்லபடியாக இருந்தாலும் உலக அளவில் ஏதாவது நெகட்டிவ் செய்திகள் வந்தாலும் சந்தை சரியலாம். சந்தை இப்போதுள்ள நிலைமையில் இருந்து நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேலேயோ அல்லது கீழேயோ செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக என் அனலிஸ்ட் நண்பர்கள் சொல்கிறார்கள். இது பெரிய அளவிலான ஏற்ற, இறக்கம் அல்ல. எனவே, நீண்ட காலத்துக்கு முதலீடு செய்கிறவர்கள் இது பற்றி கவலைப்படாமல் முதலீடு செய்யலாம்’’ என்றார்.

‘‘பேங்க் இண்டெக்ஸ் நன்றாக ஏறியிருக்கிறதே, என்ன காரணம்?’’ என்று அடுத்த கேள்வியை எழுப்பினோம்.

‘‘2016-17-ம் நிதி ஆண்டு தொடங்கி இதுவரையில் பேங்க் இண்டெக்ஸ் 20% ஏற்றம் கண்டிருக்கிறது. காரணம், சில பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதுதான். ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் பங்குகள் 89% ஏற்றம் கண்டிருக்கிறது. அதற்கு அடுத்த படியாக அலகாபாத் பேங்க் 68% ஏறியிருக்கிறது. ஆனால், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகளில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டின் மிகப் பெரிய வங்கியாக இருந்தாலும் அதன் மொத்த வாராக் கடன் ரூ.98 ஆயிரம் கோடிக்கு மேல். இது இந்த வங்கிக்கு மிகப் பெரிய மைனஸ் பாயின்ட். இதனால், இந்த வங்கியில் எஃப்ஐஐக்களின் பங்கு மூலதனம் கடந்த ஜூன் காலாண்டில் 8.85 சதவிகிதமாகக் குறைந்தது. இது கடந்த 11 மாதங்களில் மிகக் குறைவாகும். அதே நேரத்தில், மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு தொடர்ந்து அதிகரித்திருக்கிறது’’ என்றவரிடம், ‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வங்கிப் பங்குகளில் தங்களது முதலீட்டை அதிகரிக்க என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது முதலீட்டை வங்கிப் பங்குகளில் அதிகப்படுத்தியுள்ளன. மே மாதத்தில் அதன் முதலீடு ரூ.90,000 கோடியாக உயர்ந்தது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு ரூ.82,195.78 கோடி மற்றும் ரூ.85,330.17 கோடியாக இருந்தது. இதற்கு அரசு எடுத்துள்ள இந்த முயற்சி முக்கிய காரணம். மேலும், ரிசர்வ் வங்கி வரும் 2017 மார்ச்சுக்குள் வங்கிகளின் நிதிநிலையை சமநிலைப் படுத்துவதில் தீவிரமாக உள்ளது. இதனால் இப்போது பிரச்னையில் இருக்கும் பொதுத் துறை வங்கிகள் நீண்ட காலத்தில் நன்றாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது. அதைக் கணக்கில் வைத்தே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வங்கிப் பங்குகளில் தங்களது முதலீட்டை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் என்எஸ்இ பிஎஸ்யூ இண்டெக்ஸ் 26.48% ஏற்றம் கண்டிருக்கிறது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்