பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ்

கடந்த வார பரிந்துரையில் நிஃப்டி ப்யூச்சர் 8660 - 8680 லெவல்களை தொட வாய்ப்பு இருக்கிறது என்றும், பேங்க் நிஃப்டிக்கு 19200 லெவல்களில் வலுவான ரெசிஸ்டன்ஸ் இருக்கும் என்று சொல்லி இருந்தோம். தற்போது நிஃப்டி பரிந்துரைக்கப்பட்ட லெவல்களைத் தொட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், 8600 லெவல்களில்  சந்தையில் சப்ளை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

பேங்க் நிஃப்டி சற்றே வேகமாக விலை உயர்ந்து, அதன் ரெசிஸ்டன்ஸ் நிலைக்கு அருகில் வர்த்தகமாகியுள்ளது. பேங்க் நிஃப்டி தற்போது அதிகரிக்கத் தொடங்கி இருந்தாலும், நிஃப்டி 8500 லெவலிலிருந்து உயர முயற்சிக்கிறது.

தற்போது ஜூன் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனின் தொடக்கத்தை வைத்து பார்த்தால், கலவையான நிதிநிலை முடிவுகளே வந்து கொண்டிருக்கின்றன். அதே போல், சந்தையில் காலாண்டு முடிவுகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் இன்னும் பெரிதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிரெக்ஸிட்டுக்கு பிறகு இந்திய சந்தை உயர்ந்து வர்த்தகமானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன்பிறகு ஏற்பட்ட ஒவ்வொரு புல்பேக் சமயங்களிலும், விற்கப்படும் பங்குகளை வாங்குவதற்குத் தயாராக இருக்கும் வர்த்தகர்களை பார்க்க முடிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்