நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டெக்னிக்கல்கள் பொய்யாகிப் போகும் வாய்ப்புகள் அதிகம் என்றும் காலாண்டு முடிவுகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும் என்றும் டெக்னிக்கல் செட் அப் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருப்பதால் கவனத்துடன் டிரேடிங் செய்ய வேண்டியிருக்கும் என்றும் நெகட்டிவ் செய்திகள் வந்தால் வியா பாரத்தை நிறுத்திக்கொள்வதே நல்லது எனலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

இரண்டு நாட்கள் இறக்கத்தையும் மூன்று நாட்கள் ஏற்றத்தையும் சந்தித்து முடிவடைந்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் முடிவடைந்தது. வரும் வாரம் எக்ஸ்பைரி வாரம். பெரிய அளவிலான இந்தியப் பொருளாதார டேட்டாக்கள் ஏதும் வரும் வாரத்தில் இல்லை. எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்கள் பெரிய அளவில் வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் இருக்கும்.

மேலும், அமெரிக்க ஃபெடரல் வட்டி விகித முடிவுகளும் வெளிவர இருக்கின்றன. எனவே, எக்ஸ்பைரிக்கு பின்னால் சந்தையின் போக்கும் வாலட்டை லிட்டியும் கணிசமான அளவில் மாறக்கூடும். அதனால் நிஃப்டியில் வியாபாரத்தைத் தவிர்த்து ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் செய்வதே சிறந்தது எனலாம். புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியா பாரத்தை வரும் வாரத்தில் தவிர்ப்பதே நல்லது எனலாம்.

வால்யூம் குறைவாக நடந்து செய்திகள் நெகட்டிவ்வாக வரும்பட்சத்தில் வேகமானதொரு கரெக்‌ஷன் வந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் வால்யூமின் மீதும் மற்றும் செய்திகள்/ரிசல்ட்டுகள் மீதும் கவனம்வைத்தே தொடர்ந்து வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். கவனம் தேவை. ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாகத் தவிர்க்கவேண்டிய கால கட்டம் இது. அதிக கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில்கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 22-07-16 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்