பிசினஸ் சீக்ரெட்ஸ் - 43

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்ஜெயிக்க வைக்கும் மனப்பான்மை!

ரு பிசினஸை ஆரம்பித்துவிடுவது சுலபம். ஆனால், அதில் ஜெயிப்பதுதான் கடினமான விஷயம். பிசினஸில் ஜெயிப்பதற்கு கொஞ்சம் முதலீடும் கடின உழைப்பும் இருந்தால் மட்டும் போதாது. ஜெயிக்க வேண்டும் என்பதற்கான மனப்பான்மை (attitude) நம்மிடம் சரியான அளவில் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட மனப்பான்மை இருந்தால் பிசினஸில் ஜெயிக்க முடியும் என்பதை இப்போது சொல்கிறேன்.

நான் இப்போது சொல்லப் போகிற விஷயங்கள், புதிதாக பிசினஸ் ஆரம்பிக்க நினைக்கிற வர்களுக்கும், சிறிய அளவில் பிசினஸ் நடத்தி, இன்னும் பெரிதாக உயர வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கும் மட்டுமல்ல, ஒரு நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவர் களுக்கும், சிறிய பதவியிலிருந்து உயர்ந்த பதவியை அடைய நினைக்கிறவர்களுக்கும் பொருந்தும்.

தனிப்பட்ட குணாதிசயங்கள் (Personal traits)

* செய்யும் வேலையில் அளவு கடந்த ஆர்வம் (Passion) இருக்க வேண்டும்.

ஏதோ நாமும் ஒரு பிசினஸ் செய்கிறோம் அல்லது ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம் என்று நினைக்காமல், நாம் செய்யும் பிசினஸை அல்லது வேலையை  எந்த அளவுக்கு ஆர்வமாக செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு செய்ய வேண்டும். அளவு கடந்த ஆர்வம் இருக்கும் போது, அந்த பிசினஸ் அல்லது வேலையில் இருக்கும் நெளிவுசுளிவுகள் அனைத்தையும் நாம் தெரிந்து கொள்வோம். ஒருமுறை தவறு செய்தாலும் அதை மீண்டும் செய்யாதபடிக்கு அனுபவம் பெறுவோம். இந்த அனுபவம் நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்