Zero to Hero - 7

சாதிக்கும் பிசினஸ்மேன்கள்!ஏ.ஆர்.குமார்

ராஜபாளையத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த குருமூர்த்தி, இன்றைக்கு கோடிக் கணக்கில் டேர்ன்ஓவர் செய்யும் கெமிக்கல் கம்பெனியை நடத்தி வருகிறார். ஜி.ஜி.கே பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான குருமூர்த்தி இந்த சாதனையை செய்தது எப்படி என்று அவரிடமே கேட்டோம்...

விவசாயக் குடும்பம்!

‘‘ராஜபாளையத்திலிருந்து சங்கரன்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சிறு கிராமமான கிழவிகுளத்தில் எங்கள் குடும்பம் வசித்து வந்தது. விவசாயக் குடும்பம். என் அப்பா பள்ளி ஆசிரியராக வேலை செய்தார். கொஞ்சம் நிலம் இருந்ததால் விவசாயமும் செய்து வந்தோம். என் அப்பாவுக்கு ஐந்து மகன்கள்; இரண்டு மகள்கள். நான் மூன்றாவது மகன். பெரிய அண்ணன் நன்றாகப் படித்து, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். நானும் பியூசி வகுப்பை பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். சிவகாசியில் 1974-ல் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி முடித்தேன். 1976-ல் தூத்துக்குடியில் பி.எட். பட்டம் பெற்றேன்.

அந்தக் காலத்தில் படித்து முடித்தபின் பள்ளி ஆசிரியர் அல்லது போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இந்த இரண்டு வேலைகளில் ஒன்றைப் பெற வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், எனக்கு இந்த இரண்டு வேலைக்கும் கடைசி நேர்காணல் வரை சென்றும் கிடைக்கவில்லை என்பதால் சென்னைக்கு வேலை தேடிவந்தேன்.

முதல் வேலை!

1976-ல் சென்னையில் முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்தது ஒரு கெமிக்கல் கம்பெனியில். 200 ரூபாய்க்குள் சம்பளம். என்றாலும் சம்பளத்தை மட்டுமே நான் பெரிதாக நினைக்காமல், பொறுப் புணர்வுடன் வேலை பார்த்தேன். காலை ஆறு மணிக்கே கம்பெனிக்கு வந்துவிடுவேன். அமிலங்களைக் காய்ச்சி வடிக்கும் உபகரணங்களைப்  பயன்படுத்தும் பகுதியை  சுத்தமாகக் கழுவி தயாரிப்பை ஆரம்பித்து, ஒன்பது மணிக்கு ஆட்கள் வருவதற்குள்  எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு தயாராக வைத் திருப்பேன். ஒன்பது மணிக்கு கம்பெனி ஊழியர்கள் வந்தபின், நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு 10 மணிக்குள் வந்துவிடுவேன். திருமணமான பின்பும், இரவு வீட்டைப் பூட்டி விட்டு, கம்பெனிக்கு சைக்கிளில் வந்து பார்ப்பேன்.

இதனால் உற்பத்தி, ஆய்வுக் கூட வேலை, பேக்கிங், தட்டச்சு, ரயில், லாரி புக்கிங் உள்பட பல வேலைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது. என் சம்பளம் படிப்படியாக 800 ரூபாய் வரை உயர்ந்தது.

எனக்கு நானே முதலாளி!

கம்பெனி வேலையைக் கவனமாக செய்துகொண்டிருந்த நேரத்தில் திடீரென எனக்கு ஒரு யோசனை வந்தது. பிறருக்காக நாம் வேலை செய்வதைவிட, நாமே கெமிக்கலை வாங்கி விற்பதன் மூலம் சம்பளத்தைவிட அதிக வருமானத்தைப் பார்க்க லாமே! என்று யோசித்தேன். காரணம், கெமிக்கல்கள் எங்கே வாங்க வேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. அவற்றை எங்கே விற்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. எனவே, எனக்கு நானே முதலாளி ஆக முடிவு செய்தேன்.

அம்மாவின் நகை!

நான் சம்பளமாக வாங்கிய பணத்தில் சுமார் ரூ.1,300தான் சேமித்து வைத்திருந்தேன். அது தவிர என் அம்மா தனது நகையை அடகு வைத்து எனக்கு ரூ.8,000 தந்தார். இதுதான் என் தொழில் முதலீடு. ஹைட்ரோ குளோரிக், சல்ப்யூரிக் ஆசிட், நைட்ரிக் ஆசிட் போன்ற அமிலங்களை  மொத்தமாக வாங்கி, அதனை சிறு கேன்களில் அடைத்து, ஒரு மூன்று சக்கர வண்டியில் எடுத்துச் சென்று தேவைப்படுகிற அளவுக்கு கொடுப்பதுதான் நான் முதலில் செய்ய ஆரம்பித்த பிசினஸ். நான் எதிர்பார்த்ததை விட பிசினஸ் நன்றாக நடந்தது. எனவே, தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்