விவசாய வளர்ச்சி ஒன்றே சமுதாயத்தைக் காக்கும்!

ர்வதேச அளவில் உணவுப் பொருட்களுக்கான விலை இரண்டு மடங்கு உயரும்பட்சத்தில் நம் நாடு சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாயை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. நம் நாடு மட்டுமல்ல, சீனா உள்பட உலகின் பல நூறு நாடுகள் இப்படிப்பட்ட இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை சொல்லி இருக்கிறது.  

பெருகிவரும் மக்கள் தொகையினாலும், மக்களின் வாங்கும் சக்தி மென்மேலும் அதிகரித்து வருவதினாலும் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஒருபக்கம்; கடுமையான வறட்சி, சமாளிக்க முடியாத பெரிய வெள்ளம் போன்ற சுற்றுச்சூழல் மாறுபாடுகளினால் உணவுப் பொருள் உற்பத்தி கணிசமாகக் குறைந்து வருவது இன்னொரு பக்கம். இதனால் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வதைத் தடுக்க முடியாத சூழல் ஏற்படும் என எச்சரித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை.

எதிர்காலத்தில் நாம் சந்தித்தே ஆகவேண்டிய இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதை நமது அரசாங்கம் இன்றைக்கே சிந்திக்கத் தொடங்க வேண்டும். 2008-09-ம் ஆண்டில் இந்தியா முழுக்க சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரின் பரப்பளவு சுமார் 45.5 மில்லியன் ஹெக்டேர். இது 2014 - 15-ல் 42 மில்லியன் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்காரர்களால் கூறு போட்டு விற்கப்படுவதும், தொழிற்சாலை அமைக்க தாரை வார்க்கப்படுவதுமே இதற்கு முக்கிய காரணங்கள். உணவுப் பொருட்களை விளைவிக்கும் பரப்பளவு  குறைந்து கொண்டே போனால், அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு மூன்று வேளைக்கு சோறு போட முடியாத நிலை ஏற்படும். வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, நம் பணம் பெருமளவில் வெளிநாட்டுக்குச் சென்று, நாம் கடன்காரர்களாக மாறவேண்டிய சூழல் ஏற்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்