மியூச்சுவல் ஃபண்ட் : அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு...

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

எஸ்.ஐ.பி - முன்பு ஒரு சிலருக்கே தெரிந்த வார்த்தையாக இருந்தது, இன்றைக்கு பலரும் அடிக்கடி கேள்விப்படுகிற வார்த்தையாக மாறி இருக்கிறது. ஏழையைக்கூட பணக்காரராக மாற்றிவிடும் மந்திர சக்தி கொண்டது எஸ்.ஐ.பி. சிறு துளி, பெரு வெள்ளம் என்பதற்கு இனி எஸ்.ஐ.பி.யை உதாரணமாக சொல்லலாம். இந்த எஸ்.ஐ.பி.யை  பற்றி எல்லோருக்கும் எடுத்துச் சொல்லத்தான் இந்தக் கட்டுரை.
 
நம்மில் பெரும்பாலோர் மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள் அல்லது சொந்தத் தொழில் செய்பவர்கள். நம்மால் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை நமது எதிர்காலத் தேவைகளுக்காக ஒதுக்கி சேமிக்க/ முதலீடு செய்ய முடியும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் அவ்வாறு மாதம்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக செய்யும் முதலீட்டைத்தான் எஸ்.ஐ.பி (SIP – Systematic Investment Plan) என்கிறோம்.

இந்த முறை கடந்த பல ஆண்டுகளாக நம்மிடையே இருந்தாலும், கடந்த நிதி ஆண்டில் நமது மக்களிடம் மிகவும் பாப்புலராகி உள்ளது. செபி/ ஆம்ஃபி/ கேம்ஸ் அமைப்புகள் தரும் புள்ளி விபரங்களின்படி, கிட்டத்தட்ட ஒரு கோடி எஸ்.ஐ.பி இன்று உள்ளன.   கடந்த காலத்தில்  மாதமொன்றுக்கு சுமார் ரூ.2,000 கோடி என்கிற அளவில் எஸ்.ஐ.பி மூலமாக வந்த முதலீடு தற்போது மாதத்துக்கு ரூ.3,500 கோடியை எட்டியுள்ளது. இந்த உயர்வு கடந்த வருடத்தில் பங்குச் சந்தை பெரிய வருமானம் எதுவும் தராத சமயத்தில் நடந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்