கராத்தே கற்றுத் தருவதால் வரும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டுமா?

கேள்வி-பதில்

? நான் ஃப்ரீலான்ஸாக கராத்தே மற்றும் ஜூடோ தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர். இதன் மூலம் வருடத்துக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்துக்கு நான் வருமான வரி மற்றும் சேவை வரி கட்ட வேண்டுமா? வரி விலக்கு ஏதாவது இருக்கிறதா?

@ வேல் ,

ச.ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்.


“நீங்கள் ‘வணிகம் மற்றும் தொழில் சார்ந்த வருமானங்கள்’ என்ற பிரிவின் கீழ் வரியைக் கணக்கிட்டு, கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம். மேலும், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பான ரூ.2,50,000 வரை விலக்கு பெறமுடியும். அது மட்டுமின்றி, பிரிவு 80சி, 80ஜி, 80டி, 80இ போன்ற பிரிவுகளின் கீழ் முதலீடு மற்றும் செலவினங்கள் ஏதாவது செய்திருப்பின் வரி விலக்கு பெற முடியும். மேலும் ரூ.10 லட்சம் வரை சேவை வரி விலக்கு இருப்பதால், நீங்கள் சேவை வரி கட்ட வேண்டிய அவசியமில்லை.”

? என் வயது 23. நான் நீண்ட கால அடிப்படையில் எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.1,000 வீதம் ஹெச்டிஎஃப்சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். ஐசிஐசிஐ புரூ போகஸ்டு புளூசிப் ஃபண்டில் ரூ.2,000-மும் முதலீடு செய்துள்ளேன். இதில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா, இல்லை வேறு ஃபண்டுக்கு மாற்றலாமா?

மாரிச்செல்வம்,

கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர், மதுரை.

“தங்களின் வயது மற்றும் நீண்ட கால முதலீடு என்கிற அடிப்படையில் ஹெச்டிஎஃப்சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டை தொடரலாம். பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்டுக்கு பதிலாக பிர்லா ஸ்மால் அண்ட் மிட் கேப்  ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் டாக்ஸ் ஃபண்ட் வகையைச் சார்ந்தது. டாக்ஸ் பெனிஃபிட் தேவை என்றால் இதில்  தொடரலாம். இல்லை என்றால் வேறு மிட்  கேப் ஃபண்டுக்கு மாற்றலாம். ஐசிஐசிஐ புரூ போகஸ்டு புளூசிப் ஃபண்டுக்கு பதிலாக ஐசிஐசிஐ புரூ வேல்யு டிஸ்கவரி ஃபண்டுக்கு மாறலாம்.”

? நான் பிஎன்பி மெட் லைஃப் இன்ஷூரன்ஸில் யூலிப் பாலிசியை 2012 டிசம்பரில் எடுத்தேன். ஒரு ஆண்டு பிரீமியம் மட்டுமே செலுத்தியுள்ளேன். என்னால் தொடர்ந்து பிரீமியம் செலுத்த இயலவில்லை. யூலிப்  பாலிசியில் லாக்கிங் பிரீயட் 5 ஆண்டு என்று கூறுகிறார்கள். நான் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற 5 ஆண்டு முடிவில் எனது பாலிசி டாக்குமென்ட்டை சரண்டர் செய்ய வேண்டுமா? அல்லது 5 ஆண்டு முடிந்ததும் தானாகவே என் கணக்குக்கு பணத்தை  அனுப்புவார்களா என்பதை தெளிவுபடுத்தவும்.

பாக்கியலெட்சுமி,


ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.


“நீங்கள் ஒரு வருடமே பிரீமியம் செலுத்தியுள்ளதால், உங்களின் பாலிசியானது காலாவதியாகி இருக்கும். ஆகவே,  சரண்டர் தொகையோ, பாலிசி முதிர்வுத் தொகையோ கிடைக்காது. ஏனெனில், லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில், ஒரு வருடம் பிரீமியம் கட்டியிருந்தால், சரண்டர் மதிப்பு 100% பிடிக்கப்படும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்