ரகுராம் ராஜன் மீதான விமர்சனம்... பலவீனப்படுத்துகிறார் சுவாமி!

சோ.கார்த்திகேயன்

குராம் ராஜனை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதி பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார். இந்த  விஷயத்தில்  சுப்பிரமணியன் சுவாமி சொல்வது சரியா என பிரபல பொருளாதார நிபுணரான   அனந்த நாகேஸ்வரனிடம்   கேட்டோம். அவர் தனது கருத்தைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

பங்கம் ஏற்படுத்திவிட்டார்!


‘‘இந்தியப் பிரதமர், இந்தியப் பொருளாதாரம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கும் மிகப் பெரிய பங்கம்  ஏற்படுத்தியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. 

ரகுராம் ராஜன்  சில தவறுகள் செய்திருக்கலாம்.  அவர், ரிசர்வ் வங்கியின் கொள்கைக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள் குறித்து  பேசி இருக்கலாம். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆவதற்கு முன்பே உலகமறிந்த நபராக இருந்ததால், அவர் அப்படி பேசி இருக்கலாம். ஆனால், பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கியின் கொள்கைக்கு தொடர்பில்லாத ராஜனின்  கருத்துகளுக்கு பதிலளிக்காமல் இருந்தது பாராட்டுக்குரியது.  இந்த விஷயத்தில் அரசைவிட ராஜன்  தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்