கேட்ஜெட்ஸ்

கார்த்தி

அசூஸ் ஜென்புக் ஆர்ஓஜி ஜி 501விடபிள்யூ ASUS ZenBook ROG G501VW

மொபைல், லேப்டாப் சந்தையில்  அசூஸ் நிறுவனம் நுழைந்ததும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இளசுகளின் மனம் விரும்புவது எல்லாம் கேமிங் லேப்டாப்கள் தான்.

அசூஸ் ஜென்புக் ROG G501VWஐ பார்க்க அலுமினியம் பாடி போல் இருந்தாலும், பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டு இருக்கிறது. 16 டிடிஆர்4 ரேம், 4 ஜிபி NVIDIA ஜிஃபோர்ஸ் GTX 960M கிராபிக்ஸ் கார்ட், 15.6 இன்ச் ஸ்கீரின், 3840 x 2160 பிக்ஸல், 1 டெராபைட் ஹார்ட் டிஸ்க் என ஸ்பெஸிஃபிகேசன் சிறப்பாகவே இருக்கிறது.

கேமிங் லேப்டாப் என்பதால், இதன் எடை 2.06 கிலோ இருக்கிறது.இதே ஸ்பெக்ஸில் இருக்கும் பிற லேப்டாப்களோடு ஒப்பிடுகையில், இது பெரிய எடை இல்லை. ட்ரேக் பேட் மிகவும் பெரியதாக இருப்பதால், ஸ்க்ரோலிங் ஆப்சன் மிகவும் எளிதாக இருக்கிறது.கீபோர்டின் பட்டன்கள் பேக்லைட் வசதியுடன் இருப்பதால், இருளிலும் இதனை எளிதாக பயன்படுத்தலாம்.விண்டோஸ் 10 மென்பொருளில் இயங்கும் இந்த லேப்டாப், படம் பார்ப்பதற்கும், கேம்கள் விளையாடுவதற்கும் அட்டகாசமாக இருக்கிறது. இன்டல் ஐ7 பிராசஸரில் இந்த ஜென்புக் இயங்குகிறது.4K டிஸ்ப்ளே என்பதால், இதன் காட்சிகள் மிகவும் துள்ளியமாக இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே பெர்ஃபார்மன்ஸ் அளவுக்கு விண்டோஸ் மென்பொருளால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

கேம்களை மிகவும் கூலாக இந்த லேப்டாப் கையாண்டாலும், சில நிமிடங்களிலேயே ‘நெருப்புடா’ என கொதிக்க ஆரம்பித்துவிடுகிறது.

ரூ. 95,490 என இந்த லேப்டாப்பின் விலையை அசூஸ் நிர்ணயம் செய்து இருந்தாலும், இவர்கள் தந்து இருக்கும் ஸ்பெக்ஸ் அதை நியாயப்படுத்துகிறது.

பிளஸ்

நல்ல டிசைன்.
அட்டகாசமான டிஸ்ப்ளே

மைனஸ்

சூடாகும் பிரச்னை
ஸ்பீக்கர் சப்தம் குறைவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்