ஃபைனான்ஷியல் பிளானிங்

கா.முத்துசூரியாவளமான வருங்காலத்துக்கு வாய்ப்புள்ள திட்டங்கள்!

‘‘நல்ல வருமானம் வருகிறது; வளமான எதிர்காலத்துக்கு முதலீட்டு வழிகளைச் சொல்லுங்கள்” என கடந்த வாரம் ஒட்டன்சத்திரம் விஜயராஜ் கேட்டுவந்தார். ஏறக்குறைய விஜயராஜுக்கு இருந்தது போலவேதான் இருக்கிறது வனத்து சின்னப்பனின் பொருளாதார நிலவரங்களும். கடலூர் மாவட்டம் பனிக்கம்குப்பம் கிராமத்தைச்  சேர்ந்த வனத்து சின்னப்பன் என்ன சொல்கிறார் என்று கேட்போம்...  

“என் வயது 39. நான் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். என் மனைவி மெர்சி விண்ணரசி வீட்டுப் பொறுப்பு களை கவனித்து வருகிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன், லிங்கன் ராய்க்கு 9 வயது. நான்காம் வகுப்பு படிக்கிறான். இரண்டாவது, பெண் குழந்தை அலானா ராய். இப்போதுதான் ஆறு மாத குழந்தை.

நான் சொந்த வீட்டில் வசிப்பதால் வாடகை பிரச்னை  எதுவும் இல்லை. எனக்கு சொந்தமாக உள்ள 17 ஏக்கர் விவசாய நிலம் எனக்கான கூடுதல் பலம். அதோடு, 30 சென்ட் வீட்டு மனையும் உள்ளது.

எனக்கு மாத சம்பளம் ரூ.33,650. சி.பி.எஸ் மூலம் ரூ.3,500 பிடிக்கப் படுகிறது. பிடித்தங்கள் போக கையில் ரூ.30,000 வாங்குகிறேன். குடும்பச் செலவுகள் அனைத்தும் சேர்த்து ரூ.18,000 ஆகிறது. மீதம் இருப்பது ரூ.12,000.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்