பளிச் வருமானம் தரும் சலவைத் தொழில்!

லாபம் தரும் தொழில்கள்!த.சக்திவேல்

மூகத்தில் சரியான அங்கீகாரம் பெறாத தொழில்களைச் செய்வதற்கு பலரும் முன்வருவதில்லை. அதனால் அதை செய்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது. ஆனால், அது மாதிரியான தொழில்களின் தேவை சமூகத்துக்கு எப்போதுமே இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் சலவைத் தொழிலுக்கு இன்றைக்கு இருக்கும் முக்கியத்துவம் மிக முக்கியமானது.

இன்றைக்கு வெளியூரில் தங்கிப் படிக்கிறவர்கள், வேலை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பரபரப்பான இந்த வாழ்க்கையில் தங்கள்  துணிகளை தாங்களே சலவை செய்துகொள்ள போதிய நேரம் கிடைப்பதில்லை. அதை செய்வதற்கான பொறுமையும் பலருக்கு இருப்பதில்லை. ஓரளவுக்கு அதிக வருமானம் பெறுகிறவர்கள் தங்கள் துணிகளை சலவை செய்வதற்கு மாதம்தோறும் கணிசமான தொகையை செலவிட தயாராகவே இருக்கிறார்கள். அதனால்தான் வேலை, படிப்பு நிமித்தமாக குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்கள் தங்களின் துணிகளை சலவை செய்ய    டிரை கிளீனிங் சென்டரை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்