ஷேர்லக்: செபி அதிரடி... டீலிஸ்ட் ஆகும் 4200 பங்கு நிறுவனங்கள்!

பூனையைப் போல சைலன்ட்டாக நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக் இந்த வார கார்ட்டூனைப் பார்த்து லேசாக புன்முறுவல் பூத்தார். ‘‘ஆச்சரியமும் சந்தேகமும் கலந்த மக்களின் ரியாக்‌ஷன்... சூப்பர்’’ என்றவருக்கு ஜில்லென்று ஆப்பிள் ஜூஸ் தந்துவிட்டு, கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம்.

‘‘சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாக்க செபி மீண்டும் அதிரடியாக களம் இறங்கி இருக்கிறதே” என்றோம்.

‘‘பொது மக்களிடமிருந்து சட்ட விரோதமாக பணம் திரட்டும் 565 பொன்ஸி நிறுவனங்கள் மீது முதலில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. மேலும், பங்குச் சந்தை நெறிமுறைகளை பின்பற்றாத 4,200 நிறுவனங்களை பங்குச் சந்தையிலிருந்து வெளியேற்ற (delist) முடிவெடுத்திருக்கிறது. என்.எஸ்.இ., பி.எஸ்.இ. ஆகிய சந்தைகளில் கடந்த ஏழு ஆண்டுகளாக எந்த செயல்பாடும் இல்லாமல் கிடக்கும் 1,200 பங்கு நிறுவனங்களை முதலில் வெளியேற்றப்போகிறது. தவிர, பல்வேறு பிராந்திய பங்குச் சந்தைகளில் இருக்கும் 3,000-த்துக்கும் மேற்பட்ட செயல்படாத நிறுவனங்களையும் வெளியேற்றப்போகிறது.

வேண்டும் என்றே கடனைத் திரும்பக் கட்டாத நிறுவனங் களையும் பங்குச் சந்தை பட்டியலில் இருந்து தடை செய்ய செபி திட்டமிட்டு உள்ளது. இந்த நிறுவனப் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் அதிலிருந்து வெளியேறும் வழிகள் செய்யப்பட்டபிறகு இந்தப் பங்குகளை பட்டியலில் இருந்து நீக்க செபி நடவடிக்கை எடுக்க இருக்கிறது. இது காலம் பிடிக்கிற விஷயம் என்றாலும் முதலீட்டாளர்களுக்கு இதனால் நன்மையே ஏற்படும்’’ என்றார்.

‘‘கடந்த நான்கு நாட்களில் சந்தை நன்கு உயர்ந்திருக்கிறதே!’’ என்றோம்.

‘‘மார்கன் ஸ்டேன்லி இந்தியப்  பங்குச் சந்தை பிரகாசமாக இருக்கும் என்று சொன்னதை அடுத்து 2016 மே 25-ம் தேதி இந்தியப் பங்குச் சந்தைகள் (சென்செக்ஸ் 575.70 புள்ளி, நிஃப்டி 186.05 புள்ளி) ஏற்றம் கண்டன. அன்று அந்நிய நிதி முதலீட்டாளர்களும் (ரூ.495 கோடி), உள்நாட்டு முதலீட்டாளர் களும் (ரூ.337 கோடி) இந்தியப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். அன்றைக்கு மட்டும் இந்தியப் பங்குச் சந்தையின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.1.61 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

மோடி ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு முடிவதும் இந்த தீடீர் ஏற்றத்துக்கு ஒரு முக்கிய காரணம். மோடி ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டில் இந்திய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 6.67% அதிகரித்து உள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 38.26%, ஜப்பானின் நிக்கி 14.86%, அமெரிக்காவின் டவ்ஜோன்ஸ் 7% வளர்ச்சி கண்டு  உள்ளன.  ஆனால், கிரீஸ், ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், இங்கிலாந்து சந்தைகள் 4.6% முதல் 8.5% வரை வீழ்ச்சிக் கண்டிருக்கின் றன” என புள்ளிவிவரங் களைத் தெறிக்க விட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்