பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ் :

இந்தியப் பங்குச் சந்தைகள் குறிப்பிடும்படியாக கடந்த வாரத்தில் ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த பல வாரங்களில் நடக்காத ஏற்றம், மூன்று வர்த்தக தினங்களில் நடந்திருக்கிறது.

நடந்து முடிந்த வாரம் அதிக நிகழ்வுகளை கொண்டதாக இருந்தது. நிஃப்டி புள்ளிகள், இரண்டு ஆண்டு லாங் ரெசிஸ்டன்ஸ் டிரெண்ட்லைன் -ஐ உடைத்து (பிரேக் அவுட்) மேலேறி இருக்கிறது.

இந்த ஏற்றத்தில்  லார்ஜ் கேப் பங்குகள் அதிகமாக பங்காற்றி இருப்பது, ஷார்ட் கவரிங் நடப்பதைவிட ,  நிதி நிறுவனங்கள்  பங்குகளை அதிகம் வாங்கி இருப்பதைக் காட்டுகிறது.  இது இந்த வாரத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். அது மேம்பட்டால் அடுத்த வாரமும் ஏற்றம் தொடரும்.

நிஃப்டி போலவே, பேங்க் நிஃப்டியிலும் பிரேக் அவுட் பேட்டர்ன் காணப்படுகிறது. அதவாது, நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டிகளில் ஏற்றம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 8250 என்பது நிஃப்டியின் அடுத்த ரீடிரேஸ்மென்ட் ரெசிஸ்டன்ஸ் லெவல்-ஆக இருக்கிறது.

பேங்க் நிஃப்டி தொடர்ந்து ஏற்றம் கண்டு, 18000 புள்ளிகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. வரும் வாரத்துக்கான இலக்குகளாக இந்தப் புள்ளிகளை வைத்துக் கொள்ளலாம்.

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (JSWSTEEL)

வாங்கவும்

தற்போதைய விலை : ரூ.1,375.65


ஸ்டீல் துறையில் சிறந்த டிரெண்ட்  உள்ள பங்குகளில் முக்கியமானது இது. சமீபத்திய செய்திகளால் பங்கின் விலையில் கரெக்‌ஷன் ஏற்பட்டது. கடந்த வெள்ளி அன்று இந்த நிறுவனம் இங்கிலாந்து டாடா ஸ்டீல் சொத்துக்களை வாங்கப் போவதில்லை என்ற செய்தி ஏற்றத்துக்கான சந்தை சென்டி மென்ட்டை உயர்த்தியுள்ளது . வரும் வாரத்தில் பங்கின் விலை ரூ.1400-ரூ.1425 என்கிற அளவுக்கு அதிகரிக்கக் கூடும். இதனை இலக்காக வைத்துக்கொண்டு இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ. 1360-க்கு கீழே வைத்துக் கொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்