இறங்கி ஏறிய பங்குச் சந்தை... இனி என்ன நடக்கும்?

சி.சரவணன்

ந்தியப்  பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்கு நாட்களாக நல்ல ஏற்றம்  கண்டிருக்கிறது. நிஃப்டி 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டிருக்கிறது.  சந்தையின் இந்தப் போக்கு தொடருமா என ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.

‘‘கிட்டத்தட்ட கடந்த ஐந்து வார காலமாக சந்தை ஒரே இடத்தில் இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் சந்தை 5% ஏற்றம் கண்டிருக்கிறது. இதே ஏற்றம் தொடர்ந்தால் நிஃப்டி புள்ளிகள் இன்னும் 2 முதல் 3 மாதங்களில் 8500 முதல் 8600-ஆக அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன” என்ற ஏ.கே.பிரபாகர், சந்தை ஏற்றத்துக்கான ஆறு முக்கியக் காரணங்களை பட்டியலிட்டார்.

1. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அகில இந்திய அளவில் சரிந்திருக்கிறது. கேரளா, மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களில் அது அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. அந்த வகையில், அதற்கு ராஜ்ய சபையில் பலம் குறைந்திருக்கிறது. இதனால் வரும் பருவ மழைக் கால  நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக அதிக வாய்ப்பு இருக்கிறது. இது நடைமுறைக்கு வரும்போது, மத்திய அரசின் வருவாய் அதிகரித்து, நிதிப் பற்றாக்குறை குறைவதோடு, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடுவதும் அதிகரிக்கும். இதனால் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும். அது பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கும்.

2.  ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என சர்வே முடிவு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தத் தகவல் வெளியானதால், சர்வதேச சந்தைகள் ஏன் இந்தியச் சந்தைகள்கூட ஏற்றம் கண்டன. இன்னும் ஏற்றம் காண வாய்ப்பு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்