நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வால்யூமின் மீதும் செய்திகளின் மீதும் தொடர்ந்து கவனம் வையுங்கள்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வியாபாரத்துக்கான வாய்ப்பு எக்ஸ்பைரி வரை குறைவாகவே இருக்கும் என்றும் ஹைரிஸ்க் டிரேடர்கள்கூட பெரிய ஸ்விங்குகள் வரக்கூடும் என்பதை மனதில் வைத்தே வியாபாரம் செய்யவேண்டியிருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

பெரிய அளவிலான டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லாத வாரமாக இருப்பதால் செய்திகளும், நிகழ்வுகளும் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும் என்றும் அதிக கவனம் தேவைப்படும் வாரம் இது என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தின் ஒரு நாள் சிறிய இறக்கத்தையும், ஒரு நாள் சுமாரான ஏற்றத்தையும், மூன்று நாட்கள் வேகமான ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 406 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது. செய்திகள் பாசிட்டிவ்வாக வந்ததால் மட்டுமே இந்த அளவுக்கான ஏற்றம் சந்தையில் வந்தது.

டெக்னிக்கலாக இரண்டு வாரங்களாக ஒரு இன்வர்ஸ் ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்னில் (08-05-16 தேதியிட்ட இதழில் தரப்பட்டிருந்த சார்ட்டில் சிகப்பு நிறத்தில் கோடிட்டு காட்டப்பட்டிருந்தது) இருந்த நிஃப்டி அதற்குண்டான விதியின்படி, வால்யூமுடன் நடைபெற்ற வேகமான ஏற்றத்தினால் இந்த அளவிலான ஏற்றத்தை சந்தித்துள்ளது. இன்வர்ஸ் ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் விதிப்படி, நிஃப்டி 8300 லெவல்களை தாண்டிச் செல்லும் அளவுக்கான வாய்ப்பு இருக்கிறது என்கிறபோதிலும் செய்திகளும் நிகழ்வுகளும் அதற்கான சப்போர்ட்டைத் தருவதாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வையுங்கள்.

நெகட்டிவ் செய்திகளும், பிராஃபிட் புக்கிங்கும் தற்காலிக இறக்கத்தைக் கொண்டு வந்துவிடக்கூடும் என்பதை மனதில் வைத்தே டிரேடர்கள் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் கூடிய ஸ்டாக் ஸ்பெசிபிக்கான லாங் சைட் வியாபாரமே இது போன்ற சூழல்களில் சிறந்தது எனலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்