டிரேடர்களே உஷார் - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நினைச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு..!தி.ரா.அருள்ராஜன் தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

வேணுகோபாலுக்கு மனசே ஆறவில்லை. கஷ்டப்பட்டு, குருவி சேர்க்கிற மாதிரி ஆயிரம், இரண்டாயிரம் என்று சேர்த்து வைத்திருந்த ரூ.50,000 பணம் மொத்தமா போச்சே என்று வருத்தப்பட்டார். இந்தப் பணத்தை   பேங்க் எஃப்.டி.யில் போட்டு வைத்திருந்தால், வட்டி குறைந்து கொண்டே வருகிறதே!

அதற்குப் பதிலாக நல்ல கம்பெனி ஷேரில் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்று யாரோ சொன்னதை நம்பி, நண்பருக்குத் தெரிந்த புரோக்கர் மூலமாக ஒரு டீமேட் கணக்கைத் தொடங்கி னார். அதற்கு முன்னதாக, முன்னணி நிறுவனங்கள் பலவற்றை ஆராய்ந்தார். தொடர்ந்து டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனங்களாகவும், மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் லாபம் கொடுத்துக்கொண்டு இருக்கும் நிறுவனங்களாகவும் பார்த்து பார்த்து தேர்வு செய்தார். இப்படி தேர்வு செய்த, ஐந்து நிறுவனங்களில்தான் தன்னுடைய நீண்ட கால சேமிப்பான ஐம்பதாயிரம் ரூபாயை முதலீடு செய்தார். தன்னுடைய முதலீடு புளூசிப் நிறுவனங்களில் இருப்பதை நினைத்து கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. நாமும் ஒரு சின்ன போர்டஃபோலியோவை தயார் செய்துவிட்டோம். இந்த சின்ன போர்ட்ஃபோலியோ, வருஷத்துக்கு 20% லாபம் தந்தால் போதும் என நம்பினார். அதற்காகவே ஒரு நோட்டை போட்டு, அடுத்தடுத்த வருடங் களில் அது எவ்வளவாக மாறும் என்றும் போட்டு வைத்திருந்தார்.

இப்போதைய முதலீடு ரூ.50,000 வருடத்துக்கு 20% உயர்ந்தால்... 5 வருடம் கழித்து ரூ.1,24,416-ஆக மாறும். 10 வருடம் கழித்து ரூ.3,08,589- ஆக மாறும். 15 வருடம் கழித்து ரூ.7,70,351-ஆக மாறும். முதல் குழந்தை 15 வருஷம் கழித்து கல்லூரியில் சேரும்போது, இந்த 7 லட்சம் ரூபாய் உதவியாக இருக்கும் என தெளிவாகத் திட்ட மிட்டு, முதலீட்டை செய்தார்.

அவர் முதலீடு செய்திருந்த நிறுவனங்களின் பங்கு விலையை அவ்வப்போது டிவியில் பார்த்துக் கொள்வார். அந்தப் பங்குகள் முதல் மூன்று மாதத்திலேயே 8% ஏற்றம் கண்டது.அவருக்கு மகிழ்ச்சி. அது நன்கு வளரட்டும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்