பிசினஸ் சீக்ரெட்ஸ் - 44

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
‘கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்ஜெயிக்க வைக்கும் தலைமைப் பண்புகள்!

பிசினஸில் ஜெயிப்பதற்கு தனிப்பட்ட குணாதிசயங்கள் (Personal traits), உள்ளார்ந்த அறிவுத்திறன் (Native Intelligence) ஆகியவை மட்டும் இருந்தால் போதாது;  வேறு சில விஷயங்களும் வேண்டும் என்று சொல்லி இருந்தேன். அந்த வேறு சில விஷயங்களில், தலைமைப் பண்புகள் (Leadership traits) சார்ந்த சில விஷயங்கள் மிக முக்கியமாக இருக்க வேண்டும்.

நீண்ட கால சிந்தனை வேண்டும்!

பிசினஸின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, இன்றைக்கு நாம் ஆரம்பிக்கும் பிசினஸ் 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் என காலம் கடந்து நிற்க வேண்டும் என்கிற சிந்தனை நிச்சயம் வேண்டும். இன்றைக்கு நாம் ஆரம்பிக்கும் பிசினஸ் கொஞ்சம் மெதுவாக வளர்ந்தாலும், நீண்ட காலத்தில் அது நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்க வேண்டும். குறுகிய காலத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் பிசினஸில் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாது.

இன்றைக்கு 100 ஆண்டுகள் தாண்டி நிற்கிற நிறுவனங்களைப் பாருங்கள். அந்த நிறுவனங்கள் தரத்துக்கும், வாடிக்கையாளர் சேவைக்கும், காலத்துக்கேற்ப மாறும் தன்மைக்கும் முக்கியத்துவம் தருகிற நிறுவனங்களாக இருந்திருக்கும். ஆனால், வேகமாக வளரத் துடிக்கும் நிறுவனங்கள் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையைவிட வேறு சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும்.

 உதாரணமாக, சில நிறுவனங்கள் வியாபாரத்தைப் பெருக்குவதற்கு அதிகமான தள்ளுபடியைத் தரலாம். தள்ளுபடி தந்து வியாபாரம் செய்வது தவறில்லை. ஆனால்,  தள்ளுபடி தந்துகொண்டே போனால், லாபம் குறையவே செய்யும்.  எனவே, அதிகமான லாபத்துக்கு என்ன வழி என்பதைக் கண்டறிந்து, அதன் படி பிசினஸை வளர்த்தெடுப் பதன் மூலம் நீண்ட காலத்தில் நாம் நிலைத்து நிற்க முடியும்.

வேகமும், பாசிட்டிவ் அணுகுமுறையும் வேண்டும்!

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேகமும், பாசிட்டிவ்வான சிந்தனையும் வேண்டும். நீண்ட காலம் நிலைத்து நிற்கிற மாதிரியான நிறுவனத்தைக் கட்டி எழுப்பப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஆமை வேகத்தில் செயல்படக் கூடாது. பிசினஸில் புதிதாக உருவாகும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைக் குறித்து வேகமாக முடிவெடுக்க வேண்டும். நிறுத்தி, நிதானமாக யோசித்தாலும், காலத்தில் முடிவெடுக்காமல் ஜவ்வு மாதிரி இழுத்து செயல்பட்டால், நம்மைத் தேடி வரும் வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்