ஃபைனான்ஷியல் பிளானிங்

ஒரு கோடி ரூபாய்... 5 வருடம்... கைகூடுமா கனவு வீடு?கா.முத்துசூரியா

பெண்கள்  நிதியைக் கையாளும் குடும்பங்களில் பெரும்பாலும் பணச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.  ஆனாலும்  துணிச்சலாக களம் இறங்கி எதிர்காலத்துக்கான ஆலோசனையைக் கேட்பதில் பல பெண்களுக்கு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

அந்த தயக்கத்தை உடைத்து தன் குடும்பத்துக்கான நிதி ஆலோசனை கேட்டு வந்திருக்கும் ஜனனி பார்த்தசாரதியை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்போம். இனி ஜனனி சொல்வதைக் கேட்போம்.

‘‘எனக்கு 29 வயது. என் கணவருக்கு 30 வயது. நான் நாணயம் விகடனை தொடர்ந்து படித்து வருகிறேன். அதன் மூலமான உந்துதலில்தான் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீட்டையே ஆரம்பிக்க இருக்கிறேன்.

நான் பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் கணவர் பார்த்தசாரதி மரைன் இன்ஜினீயராக உள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இருவருமே பர்சனல் லோன் வாங்கித்தான் திருமணத்துக்கான செலவுகளை சமாளித்தோம். இன்னும் ஆறு மாதத்துக்குள் பர்சனல் லோனை அடைத்து விடுவோம். மிக விரைவில் என் கணவருக்கு புரமோஷன் கிடைக்க உள்ளது. அப்போது அவருடைய சம்பளம் மாதம் ரூ.5.65 லட்சமாக உயரும்.  அதற்கு அடுத்த புரமோஷனில் மாதம் ரூ.8 லட்சமாக சம்பளம் உயரும். என்னுடைய நிறுவனத்தில் என் குடும்பத்தார் அனைவருக்கும் சேர்த்து போதுமான அளவுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொடுத்துள்ளார்கள். என் கணவருக்கு ரூ.1 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துள்ளோம். நாணயம் விகடன் படிக்க ஆரம்பித்த பிறகுதான் டேர்ம் இன்ஷூரன்ஸ் ஏன் எடுக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டோம்” என்ற ஜனனி இலக்குகளை பட்டியலிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்