வளர்ந்து வரும் நேரத்தில் சர்ச்சை வேண்டாமே!

ஹலோ வாசகர்களே..!

ந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதற்கான புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன. நமது ஜி.டி.பி.யானது கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 7.9 சதவிகித வளர்ச்சி கண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 7.3 சதவிகித வளர்ச்சி மட்டுமே நமது ஜி.டி.பி. கண்டது. தவிர, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டைவிட 39.9% அதிகம் லாபம் கண்டிருக்கின்றன. இது கடந்த 11 காலாண்டுகளில் இல்லாத வளர்ச்சி.

சர்வதேசப் பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களில் சிக்கி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரிய அளவில் ஆதரவாக இல்லாத நிலையில், நாம் இந்த வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம் என்பதை சொல்லியே ஆகவேண்டும். இதனை நன்கு புரிந்துகொண்டதன் விளைவாகவே, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தியப் பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக உயரும் என்று சொல்லி இருக்கிறார். 2025-க்குள் இது நிஜமாகலாம்.

வேகமான இந்த பொருளாதார வளர்ச்சிக்கு மோடியின் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சி ஒரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. ஊழல் என்கிற பேச்சே இதுவரை எழாமல் இருப்பதே இந்த ஆட்சியின் முக்கியமான சிறப்பம்சம். தவிர, ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட இலக்கு வைத்து முன்னேறுவதும் பாராட்டத்தக்கதே. வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும், அந்த வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உயர்த்தவும் மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் விளைவாகத்தான் நமது பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில்  செல்லத் தொடங்கி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்