பி.எஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அதிகரிப்பு... எப்போது அறிவிப்பு வரும்?

சோ.கார்த்திகேயன்

பி.எஃப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இதற்குமுன் இந்த கவரேஜ் தொகை ரூ.3.6 லட்சமாக இருந்தது, தற்போது இது ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், இது குறித்து தொழிலாளர் அமைச்சகத்திடம் இருந்தோ, சட்ட அமைச்சகத் திடம் இருந்தோ எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பதால் இந்த இன்ஷூரன்ஸ் கவரேஜ் உயர்வு குறித்து பல குழப்பமான தகவல்கள் கிளம்ப ஆரம்பித்தன. 

இந்த நிலையில், இந்த இன்ஷுரன்ஸ் கவரேஜ் உயர்வு குறித்து சென்னையில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலக அதிகாரிகளிடம் விசாரித்தோம். அவர்கள் இது குறித்து விவரமாக எடுத்துச் சொன்னார்கள்.

“எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் தனது ஊழியர்களுக்கு பி.எஃப் பணத்தை சரியான முறையில் செலுத்துகிறார்களா என்பதை அரசாங்கம் கவனித்துக் கொண்டேதான் வருகிறது. நிறுவனம் செலுத்தாவிட்டால் இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்