முதலீட்டுக்கு உத்வேகம் தந்த மயிலாடுதுறை கூட்டம்!

மு.சா.கெளதமன்

நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து கடந்த மே 29  அன்று மயிலாடுதுறையில் ‘வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட்’  என்ற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் கேரளா பிராந்தியத் தலைவர் எஸ்.ஹரீஷ் பேசியபோது, “உலகின் பெரிய பணக்காரர்கள் கடினமாக உழைக்க வில்லை; ஸ்மார்ட்டாக உழைத்தார்கள். அவர்கள் பணம் பெருக அவர்கள் பணத்தையே உழைக்க வைத்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம், வாரன் பஃபெட். இவர் தன் 11-வது வயதில் முதலீடுகளைத் தொடங்கினார். இருப்பினும், தான் தாமதமாக முதலீடுகளைத் தொடங்கியதாக சில கூட்டங்களில் வருத்தப்பட்டிருக்கிறார். நாமெல்லாம் 20, 30 வயதைக் கடந்த பின்னும் முதலீடு செய்வது குறித்து கவலைப்படாமலே இருக்கிறோம். வளமான எதிர்காலம் அமைய வேண்டுமெனில், நாம் உடனடியாக முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்