வங்கி வட்டியைவிட அதிக வருமானம் தரும் முதலீடு எது?

கேள்வி-பதில்

?என் பெற்றோரின் பெயரில் கனரா வங்கியில் 9.10% வட்டி விகிதத்தில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்திருந்தேன். இப்போது வங்கி கொடுக்கிற வட்டி விகிதம் குறைந்து விட்டதால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. 9 - 10% வரை வட்டி தருகிற நல்ல பாதுகாப்பான முதலீடு எது?

மோகன் ராஜ்,

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்.

“வங்கிகளில் உள்ள சேமிப்பு மற்றும் வைப்புநிதி போன்றவற்றுக்கு மாற்றாக அதைவிட சிறிது அதிக வருமானம் தருகிற, ரிஸ்க் குறைவான முதலீட்டுத் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்டில் உள்ளன. பிர்லா சன்லைஃப் மீடியம் டேர்ம் அல்லது ஷார்ட் டேர்ம் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி கார்ப்பரேட் ஃபண்ட், ஐசிஐசிஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்தால் 9% முதல் 12% வரை வருமானம்  கிடைக்கும்.”

?ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூா்த்தி செய்யாதபோது, அந்த நிறுவனத்தின் பங்கு எவ்வளவு விலை இறங்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பால்ராஜ்,

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட், ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

“பொதுவாக, ஒரு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், அதன் பங்குகள் சுமார் ஒரு வார காலம் முன்னதாகவோ அல்லது முந்தைய நாளிலிருந்தோ ஏறத் தொடங்கிவிடும். அப்போது அதன் தேவைப்பாடு இயல்பு நிலையிலிருந்து சற்று அதிகமாக காணப்படும். அதற்கேற்ப அதன் விலையும் சிறிது சிறிதாக ஏறிக்கொண்டிருக்கும். காலாண்டு முடிவுகள் வெளியாகும் நாளன்று அதன் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதபோது தேவை மற்றும் விநியோக (Demand & Supply) அடிப்படையில் இறங்கத் தொடங்கிவிடும். இந்த இறக்கம் என்பது அந்த முடிவுகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

பெரும்பாலும் அதன் எதிர்பார்ப்புக்கேற்ப எவ்வளவு விலை ஏறியதோ, அதே அளவுக்கு இறங்கவும் வாய்ப்புண்டு. ஒருவேளை அந்த முடிவுகள் மிக மோசமானதாக இருந்தால், அதன் பாதிப்புக்கேற்ப பங்கு விலை இன்னும் அதிகமாக கீழிறங்கும். ஆனால், இந்த விலைச் சரிவு நிலையானதல்ல. தவிர, இந்த விலைச்சரிவை அளவீடு செய்ய துல்லியமான அளவுகோல்களும் கிடையாது. நீண்டகால முதலீடு செய்பவர்கள் வெறும் காலாண்டு முடிவுகளை மட்டும் வைத்து அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை முடிவு செய்வது சரியாக இருக்காது. சுமார் 5 வருட கால வருடாந்திர முடிவுகளை வைத்து ஆராய்ந்த பின்னரே ஒரு நிறுவனத்தின் முழுமையான செயல்திறனைக் கணிக்க முடியும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்