நாணயம் லைப்ரரி: ஆசைப்படுங்கள்... செயல்படுங்கள்... வெற்றிபெறுங்கள்!

புத்தகத்தின் பெயர் : த அச்சிவ்மென்ட் ஹாபிட் (The Achievement Habit)

ஆசிரியர் : பெர்னார்ட் ராத் (Bernard Roth)

பதிப்பாளர் : HARPER COLLINS WORLD

பெர்னார்ட் ராத் எழுதிய ‘த அச்சிவ்மென்ட் ஹாபிட்’ என்னும் புத்தகம், ‘ஆசைப்படுவதோடு மட்டும் நிறுத்தாதீர்கள்; அதை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் இறங்குவதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் வெற்றியை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்’ என்பதை வலியுறுத்துகிறது.

கிரியேட்டிவ்வாக சிந்தித்து வெல்லும் விதத்தை பல்வேறு நபர்களின்  நிஜ வாழ்க்கையில் நடந்த உதாரணங்களுடன் முழுமை யாகச் சொல்லி புரியவைப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

உங்கள் வாழ்க்கைக்கு எந்தவொரு  அர்த்தமும் இல்லை. ஒரு அர்த்தம் கெட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்கிறது இந்தப் புத்தகத்தின் முதல் வரி.

என்னது என் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லையா? அப்ப இந்த வாழ்க்கையை வாழ்ந்து பிரயோஜனம் இல்லையா என்று மனம் வெறுத்து விடாதீர்கள். நான் சொல்லும் அர்த்தம் என்பது நாம் பார்க்கும் மனிதர்கள், விஷயங்கள், எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் என அனைத்துமே அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்த அர்த்தங்கள் கொண்டவையே தவிர, அவை அனைத்துக்கும் நிரந்தர அர்த்தம் என்று எதுவுமில்லை என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

பெரும்பாலான சூழ்நிலைகளில் இந்த அர்த்தமானது, வெற்றி என்பது குறித்த உங்களுடைய எண்ண ஓட்டம் எந்த மாதிரி இருக்கிறதோ, அதை ஒட்டியே படர்ந்துள்ளது. இத்துப்போன மனிதர்கள் பலரும் சாதனை புரிகின்றனர். அது சாதனையே தவிர, வெற்றியல்ல. நமக்குப் பிடித்ததை செய்து, அதனைச் செய்வதனால் மகிழ்ச்சி யாக இருப்பதுவே வெற்றி என்கிறார் ஆசிரியர். 

ஒரு பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் ஆசிரியராக இருக்கும் பெர்னார்ட் ராத், அவருடைய மாணவர் ஒருவர் ஒரு கடினமான புராஜெக்ட்டை செய்து முடிக்கிறேன் என்று சொல்லி கடைசி வரை முடிக்க முடியாமல் இருந்தாராம். ‘என்ன இவன்,  முடியாத ஒரு விஷயத்தை செய்கிறேன் என மல்லுக்கட்டி நின்று அதை முடிக்காமல் இருக்கிறானே!’ என்று  வருத்தப்பட்டாராம் ஆசிரியர்.

மூன்று வருடங்களுக்குப் பின்னால் ஒரு நடன விழாவில் பாம்பு நடனம் என்கிற நிகழ்ச்சியைப் பார்த்தாராம். 160 அடி நீள பாம்பு ஒன்று அதன் வாயில் நெருப்பு வருகிற நடனம் ஆடியது தத்ரூபமாக இருந்ததைக் கண்டு ஆசிரியர் ஆச்சரியப்பட்டுப் போனாராம்.

நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் போனபிறகு ஆசிரியர் அந்த மேடைக்கு சென்று அந்த பாம்பை வடிவமைத்தது யார் என்று கேட்டாராம். ‘அதோ அங்கே நிற்கிறார் பாருங்கள். அவர்தான் அங்கே  இருந்தபடி ரிமோட் மூலம் இதை இயக்கினார்’ என்று ஒருவரைக் காட்டினார்களாம். அவர் வேறு யாருமல்ல, கல்லூரியில் கடினமான புராஜெக்ட்டை முடிக்காத அதே பழைய மாணவன்தான். என்ன ஒரு டிசைன் என வியந்து அவனை அப்படியே தழுவிக் கொண்டாராம் ஆசிரியர். ‘ஒரு சில மணி நேரங்களில் என் மதிப்பீடு எப்படி மாறிப் போனது பாருங்கள்!’ என்கிறார் ஆசிரியர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்