வருமான வரி கணக்குத் தாக்கல்... புதிய மாற்றங்களை கவனியுங்கள்! ஏ டு இசட் டிப்ஸ்

லதா ரகுநாதன், ஆடிட்டர், எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை.

ருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது நுணுக்கமான பல விஷயங்களை கவனிக்க வேண்டும். எனவேதான், ஒரு ஆடிட்டரின் துணையோடு இதை செய்ய முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஆனால், சிற்சில விஷயங்களை உங்களால் கவனமாக செய்ய முடியும் எனில், நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் ரீஃபண்ட் கோரிப் பெறுவதும் சுலபமாகிவிட்டது.

ஆனால், இதை ஒழுங்காக செய்ய வேண்டும் என்பது மட்டும் கட்டாயம்.

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது யார் எந்தப் படிவத்தை உபயோகிக்க வேண்டும், கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் உள்ள மாறுதல்கள் என்ன, பொதுவாக ஏற்படக்கூடிய தவறுகள் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில், நிதி ஆண்டு 2015-16, மதிப்பீட்டு ஆண்டு (Assessment Year) 2016-17-க்கான விவரங்களை பார்ப்போம்.

யாருக்கு எந்தப் படிவம்?

ஐடிஆர் 1 (சகஜ்) - ITR 1 (SAHAJ)


தனிநபர்கள் - இவர்களின் வருமானம் பின்வரும் வகையைச் சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 1 படிவம்தான்.

1. பென்ஷன் அல்லது சம்பளம்.

2. வீட்டு வாடகை - முன்வருடத்திய இழப்புக்களை (carry forward loss) இவ்வாண்டுக்கு கொண்டு வரப்படாததாக இருக்க வேண்டும். ஒரே ஒரு சொந்த வீடு மட்டும் தான் இருக்க வேண்டும்.

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் போன்றவைகளிலிருந்து வருமானம் இருக்கக்கூடாது.

4. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

5. செக்‌ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணமும் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது (Double Taxation Relief).

ஐடிஆர் 2 - (ITR 2)

தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப (HUF) அமைப்புக்களும் – வருமானம் பின்வரும் வகை சார்ந்ததாக இருந்தால், அவர் களுக்கு ஐடிஆர் 2 படிவம்தான்.

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால். 

3. முதலீட்டு வரவு (Capital  gains)

4. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம்

5. தனிநபர்கள், இந்தியர்களாக கருதப்பட்டு வெளிநாட்டு சொத்துக்கள் இருந்தால் அல்லது வெளிநாட்டு வருமானம் வந்தால்.

ஐடிஆர் 2ஏ ( ITR 2A)

தனிநபர்களும், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்களும் – வருமானம் இந்த வகை சார்ந்ததாக இருந்தால்.

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை  –  ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வந்தாலும்

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் – லாட்டரி, குதிரைப் பந்தயம் சேர்த்து

4. செக்‌ஷன் 90/91-ன் கீழ் எந்த இரட்டை வரி விதிப்பு நிவாரணம் கழிக்கப்பட்டு இருக்கக் கூடாது

5. வெளிநாட்டில் சொத்து அல்லது வெளிநாட்டு வருமானம் இருக்கக்கூடாது

ஐடிஆர் 4 எஸ் (ITR 4S -SUGAM)

தனிநபர்கள், இந்துக் கூட்டு குடும்ப அமைப்புக்கள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்களாக இருக்கக்கூடாது

1. சம்பளம் அல்லது பென்ஷன்

2. வீட்டு வாடகை – இதில் முன்வருடத்திய நஷ்டம் இருக்கக் கூடாது.

3. பிற ஆதாரங்களிலிருந்து வருமானம் லாட்டரி குதிரைப் பந்தயம் தவிர்த்து.

4. தொழில் வருமானம் – இந்த வருமானம் செக்‌ஷன் 44 AD அல்லது செக்‌ஷன் 44 AE-ன் கீழ் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.

5. விவசாய வருமானம் ரூ.5,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

6. செக்‌ஷன் 90/91 அடியில் நிவாரணம் கேட்கப்பட்டிருக்கக் கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்