மதிப்புக் குறையும் ஆன்லைன் நிறுவனங்கள்! என்ன காரணம்..?

ச.ஸ்ரீராம்

ந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யாதவர்களே இல்லை எனும் அளவுக்கு ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவுக்குள் காட்டுத்தீ போல பரவியது.  இதனால்  இந்த ஆன்லைன் நிறுவனங்களின் மதிப்பு                     (Valuation)  ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அப்படி  வேகமாக மதிப்பு உயர்ந்த நிறுவனங்களில் முக்கியமானது ஃப்ளிப்கார்ட்.
                                                                                                                                                                
ஆனால், வேகமான இந்த ஏற்றத்துக்கு செக் வைக்கிற மாதிரி இப்போது ஒரு சறுக்கல் மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் அறிக்கை மூலம் வந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தந்த  மதிப்பீட்டை இப்போது திடீரென வெகுவாகக் குறைத்திருக்கிறது.

ஃப்ளிப்கார்ட்டின் மதிப்பு 2015-ன் இறுதியில் 15 பில்லியன் டாலர் என்று மதிப்பிட்டது மார்கன் ஸ்டான்லி. ஆனால், தற்போது ஃப்ளிப்கார்ட்டின் மதிப்பை 9.5 பில்லியன் டாலர்களுக்கு குறைத்திருக்கிறது.  கடந்த டிசம்பர் காலாண்டு முடிவின்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 103.97 டாலராக மதிப்பிட்டது. இதுவே கடந்த மார்ச் மாத காலாண்டின் முடிவின்படி 87.9 டாலராகக் குறைத்து மதிப்பிட்டுள்ளது. ஆன்லைன் நிறுவனங்களின் மொத்த வர்த்தக மதிப்பு குறைந்ததே இதற்கு காரணம் என்றும் சொல்லி இருக்கிறது.

உண்மையில் இந்த நிறுவனங்களின் வர்த்தக மதிப்பு இந்த அளவில்தான் இருக்கிறதா? இல்லை என்றால் இந்த நிறுவனங்களின் மதிப்பு அளவுக்கு மீறி மதிப்பிடப்படுகிறதா என பல கேள்விகள் எழுகின்றன. ஆன்லைன் நிறுவனங்களின் மதிப்பு இப்படி தொடர்ந்து குறைந்தால், அவற்றின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற அச்சமும் உருவாகி உள்ளது. இந்தியாவின் முன்னணி பி-ஸ்கூல்களில் ஒவ்வொரு ஆண்டும் பலரை வேலைக்கு எடுக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்த ஆண்டு முன்னணி பி-ஸ்கூலில் இருந்து ஆட்களை எடுப்பதை ஒத்தி வைத்திருப்பது இதற்கொரு உதாரணம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2013-ம் ஆண்டிலிருந்துதான் ஆன்லைன் சந்தை இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் வளரத் துவங்கியது அதன்பின் இதில் முன்னணி நிறுவனங்களாக கூறப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிதித் திரட்டலில் இறங்கியது. ஒரு பில்லியன் டாலர் நிதி திரட்டியதாக ஃப்ளிப்கார்ட் அறிவித்த அடுத்த நாளே அமேசான் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது. இந்திய சந்தைகளில் பட்டியலிடப்படாத இந்த நிறுவனங்களின் மதிப்பு அவர்களின் மொத்த வர்த்தகம், நிதித் திரட்டல் ஆகியவற்றை கொண்டு பல பில்லியன் டாலர்களில் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

இதுபோன்ற‌ ஸ்டார்ட் அப் ஃபண்டிங் பெறும் நிறுவனங்கள் பெரும்பாலும் வென்ச்சர் கேப்பிட்டல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி மூலமாகவே நிதி திரட்டும். இன்னும் சில நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலமாக நிதி திரட்டும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாததால், இந்த ஆன்லைன் நிறுவனங்களின் மதிப்பு என்பது அவர்களது மொத்த வர்த்தக மதிப்பை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

சென்ற டிசம்பர் வரை அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்கள், இந்த பிப்ரவரி,  மார்ச்சில் மதிப்பு குறைய என்ன காரணம் என்பது குறித்து வென்ச்சர் இன்டெலிஜன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அருண் நடராஜனிடம் கேட்டோம். அவர் தெளிவான விளக்கத்தை நமக்குத் தந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்