செயற்கையாக விலையேற்றப்படும் பங்குகள்... சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

ஜெ.சரவணன்

ரு நிறுவனத்தின் பங்கு விலை, அந்த நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனாலும் சம்பாதிக்கும் லாபத்தினாலும் ஏற்றம் பெற்றால், அதை எந்த வகையிலும் சந்தேகிக்கத் தேவையில்லை. அதை இயற்கையான பங்கு விலை ஏற்றம் என்றே சொல்லலாம்.

ஆனால், எந்தக் குறிப்பிட்ட காரணங்களும் இல்லாமல் ஒரு பங்கு தொடர்ந்து விலை ஏறிக்கொண்டே இருந்தால்....? அதாவது, ஒரு நிறுவனத்தின் செயல்பாடு மோசமாக இருக்கும் போதும் அந்த நிறுவனத்தின் பங்கு விலை ஏற்றமடைகிறது என்றால் அந்தப் பங்கு செயற்கையாக விலை ஏற்றப்படு கிறது என்றுதான் அர்த்தம்.

இப்படி செயற்கையாக விலை ஏற்றப்பட்ட பங்குகளில் முதலீடு செய்பவர்கள், ஏற்றத்தில் இருக்கும் போது வெளியே வந்துவிட்டால் தப்பிப்பார்கள். இன்னும் விலை உயரும் என்று காத்திருந்தால்,  பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல் எப்போது வேண்டுமானாலும் செயற்கை யாக விலை உயர்த்தப்பட்ட இந்தப் பங்குகளின் விலை  சடசடவென இறங்கி படுபாதாளத்துக்கு சென்றுவிட  வாய்ப்புண்டு. அப்படி அகப்படும் பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை, அதன்பிறகு எழுந்தி ருப்பதே இல்லை என்பதுடன் பல நிறுவனங்கள் சந்தையி லிருந்தே வெளியேறிவிடுகின்றன. அப்படிப்பட்ட சில நிறுவனங் களை உதாரணங்களாகப் பார்ப்போம். இந்த நிறுவனங்கள் உதாரணங்களே தவிர, பரிந்துரைகள் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.

வியான் இண்டஸ்ட்ரீஸ் (2,156%)


ஹிந்துஸ்தான் சேஃப்டி கிளாஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், முன்னணி இந்தி நடிகை ஒருவர் வாங்கியபின்னர் வியான் இண்டஸ்ட்ரீஸாகப் பெயர் மாற்றம் பெற்றது. தற்போது கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் பொருட்களைத் தயாரித்து வருகிறது. 2014-15-ம் நிதி ஆண்டில் அதன் வருவாய் ரூ. 33 லட்சம், ஈட்டிய லாபம் ரூ. 7 லட்சம்.ஆனால் கடந்த 2014 செப்டம்பரில் பட்டி யலிடப்பட்ட இந்த நிறுவனப் பங்கின் விலை 2015 அக்டோபர் வரையிலான காலத்தில் 2,156% விலை உயர்ந்தது.

செப்டம்பர் 8, 2014 அன்று ரூ.10.60-ஆக இருந்த பங்கின் விலை அக்டோபர் 29, 2015-ல் ரூ.239-ஆக உயர்ந்துள்ளது. பின்னர் 2015 நவம்பரில் 330 - 360 ரூபாய் வரை உயர்ந்தது. அதிலிருந்து இன்றுவரை ஏற்ற இறக்கம் இல்லாமல் அந்த நிலையிலேயே தொடர்கிறது. விலை ஏற்றப்பட்ட காலகட்டத் தில் வர்த்தகமாகிய வால்யூம் எண்ணிக்கையும் சிங்கிள் டிஜிட் அளவுக்கு குறைவாகவே இருந்துள்ளது.

குமார் வயர் குளோத் தயாரிப்பு நிறுவனம் (858%)

பார்மா, டெக்ஸ்டைல் மற்றும் பில்டர்ஸ் துறைகளுக்கு வயர்-மெஷ் தயாரிப்புகளை உருவாக்கி வரும் இந்த நிறுவனத்தின் மார்க் கெட் கேப்பிட்டலைசேஷன் ரூ.9.69 கோடி.  2014-15-ம் நிதி ஆண்டில் இது ஈட்டிய வருமானம் ரூ.75 லட்சம். இது 2013-14-ம் நிதி ஆண்டைக் காட்டிலும் 20% குறைவு. மேலும், 2015 மார்ச் மாத காலாண்டில் ரூ.17 லட்சம் நஷ்டம் கண்டது. 2000-ல் பட்டியலிடப் பட்ட இந்த நிறுவனம் 2015 பிப்ரவரிக்கு முன்பு வரை கிட்டதட்ட வர்த்தகமே நடக்காத நிலையில் தான் இருந்தது. பிப்ரவரி 11, 2015 அன்று ரூ.1.16-ஆக இருந்த இந்த நிறுவனப் பங்கின் விலை ஜூலை 14, 2015-ல் ரூ. 11.11-ஆக உயர்ந்துள்ளது. அதன் பின்னர் 2015 அக்டோபரில் 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்ந்தது. அதன் பிறகு அந்த நிலையிலேயே தொடர்கிறது.

வாரத் வென்சர்ஸ் (788%)

வாரத் வென்சர்ஸ் என்பது ஒரு தொழில் முதலீட்டு நிறுவனம். குடிநீர், சாஃப்ட்வேர் டெவலப் மென்ட், இண்டஸ்ட்ரியல் பப்ளிகேஷன் மற்றும் கன்சல்டன்சி போன்றவற்றில் தனது முதலீடுகளைப் போட்டு தொழில் செய்து வருகிறது. இந்த நிறுவனம் 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ.87.14 கோடி வருமானம் பதிவு செய்திருந்தது. ஆனால், 2014-15 -ம் நிதி ஆண்டில் ரூ.48 லட்சம் இதன் வருமானமாகப் பதிவு செய்திருந்தது. ஆனால், 2015 ஏப்ரல் முதல் பிப்ரவரி 2016 வரையிலான காலத்தில் பங்கின் விலை 788% உயர்ந்துள்ளது. ஏப்ரல் 17, 2015-ல் ரூ.2.5-ஆக இருந்த இந்தப் பங்கின் விலை  பிப்ரவரி 19,2016 அன்று ரூ.22.20-ஆக உயர்ந்தது. தற்போது மிக மந்தமாகவே வர்த்தகமாகி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்