நிஃப்டி எதிர்பார்ப்புகள்: வட்டிவிகித முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ன்வர்ஸ் ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் விதிப்படி நிஃப்டி 8300 லெவல்களைத்   தாண்டிச் செல்லும் அளவுக்கான வாய்ப்பு இருக்கிறது என்கிற  போதிலும் செய்திகளும் நிகழ்வுகளும் அதற்கான சப்போர்ட்டை தருவதாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வையுங்கள்.

நெகட்டிவ் செய்திகளும், ஃபிராஃபிட் புக்கிங்கும் தற்காலிக இறக்கத்தை கொண்டுவந்து விடக்கூடும் என்பதை மனதில் வைத்தே டிரேடர்கள் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கடந்த வாரம் சொல்லியிருந்தோம்.

ஓரளவு வாலட்டை லிட்டியுடன் வாரத்தின் நான்கு நாட்கள் சிறிய ஏற்றத்திலும், ஒரு நாள் சிறிய அளவிலான ஏற்றத் திலும் முடிவடைந்த நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 64 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகள் வெளிவர இருக்கின்றன. வெளிவரும் வரை இது குறித்த எதிர்பார்ப்புகளும், வெளிவந்த பின்னர்  வட்டி விகித முடிவுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும்.

டெக்னிக்கலாக இன்னமும் 80 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஏற்றமே சாத்தியம் எனும் சூழலில் சந்தை இருக்கிறது. செய்திகள் பாசிட்டிவ்வாக இருந்து வால்யூமு டன் 8300 லெவல்களை தாண்டும் பட்சத்தில் 8523 வரையிலும் சென்று திரும்பக்கூடிய திறன் சந்தைக்குக் கிடைக்கலாம்.எனவே, செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் மீது கவனம் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் கூடிய ஸ்டாக் ஸ்பெசிபிக் லாங்க் சைட் வியாபாரமே சிறந்த ஸ்ட்ராட்டஜி யாக வரும் வாரத்தில் இருக்கும். ஷார்ட் சைட் மற்றும் ஓவர் நைட் வியாபாரத்தை தவிர்ப்பதே நல்லது. கவனம் தேவை.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்