டிரேடர்களே உஷார் - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.சாஃப்ட்வேர் வாங்கலையோ... சாஃப்ட்வேர்..!

லிவரதன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். அவர் ஆழ்மனதுக்குள் சில காட்சிகள் தோன்றிக்கொண்டே இருந்தன.

“வாங்க சார் வாங்க...  வாங்க சார் வாங்க... 5 இன்டிகேட்டர்... 5,000 ரூபாய். 10 இன்டிகேட்டர் ... 10,000 ரூபாய். 30 இன்டிகேட்டர்... 25,000 ரூபாய். 50 இன்டிகேட்டர் வாங்கினா...  10 இன்டிகேட்டர் ஃப்ரீ. வாங்கோ சார் வாங்கோ... ”

கலிவரதன் கொஞ்சம் புரண்டு படுத்தார். அவர் மனதில் ஒரு காட்சி...

“வாங்க சார் வாங்க...  எங்க சாஃப்ட்வேர் வாங்கினா, இன்டி கேட்டர் பத்தின கவலையே வேணாம்.  வாங்கும் இடம் வந்தா பச்சை கலர் அம்புக்குறி காட்டும். விற்கிற இடம் வந்தா சிவப்பு அம்பு குறி காட்டும். ”

கலிவரதன் மீண்டும் திரும்பி படுத்தார். அவர் மனதில் இன்னொரு காட்சி...

“வாங்க சார் வாங்க... எங்க சாஃப்ட்வேர்ல இன்டிகேட்டரும் கிடையாது; அம்புகுறியும் கிடையாது.இதை நீங்க உங்க டிரேடிங் சாஃப்ட்வேர்ல சேர்த்துவிட்டா அதுவே வாங்கும்; அதுவே விற்கும். இதைவிட ஈஸியா பணம் சம்பாதிக்கிற வழி கிடையாதுங்கோ”

கலிவரதனுக்கு யாரோ கைய பிடிச்சி இழுக்கற மாதிரியே இருந்துச்சி. திடுக்கிட்டு எழுந்தார்.மணியை பார்த்தார். காலை 5.45 என்று காட்டியது.

கலிவரதன், கடந்த ஒரு வருஷமாக டிரேடிங் பண்ணிக்கிட்டு வருகிறார். ஆனால், இதுவரை பெரிசா லாபம் பார்த்தது இல்லை. அவர் நண்பர், “மார்க்கெட்ல நிறைய சாஃப்ட்வேர் இருக்கு. உனக்கு சூட் ஆகுறதை வாங்கி வியாபாரம் பண்ணு... நீ நல்லா வருவே” எனச் சொல்லவே, கலிவரதனுக்கு அதுவே வேத வாக்காக இருந்தது. நண்பரின் யோசனைப்படி தினம் டிவி பார்த்து சாஃப்ட்வேர் பத்தி தெரிந்துகொள்ள முயற்சித்தார்.டிவியில் வந்த சாஃப்ட்வேர் வியாபாரிகள் எல்லோருமே, என்னுடையதுதான் உசத்தி என்றார்கள். கலிவரதனுக்கு ஒரே குழப்பம். அதையே நினைத்துக் கொண்டு தூங்கவே, எல்லாமே   கனவு காட்சிகளாக விரிந்தன.. கனவுகள் கலைந்துபோனாலும் எழ மனமில்லாமல், 8 மணி வரை புரண்டுவிட்டு, பிறகு அவசரமாக ஆபீஸுக்கு ஓடினார்.

ஆபீஸ்ல வேலை பார்க்கும் போதும் திடீரென்று ஞாபகம் வந்தது. இந்த சாஃப்ட்வேர் பத்தி விசாரிக்கலாம்னு இருந்தோமே. எந்த சாஃப்ட்வேர் ஆளுக்கு போன் போடலாம் என்று யோசித்தார். நாம எந்த வேலையும் பார்க்காம  தானாகவே இயங்குமே அதைப் பற்றி முதல்ல விசாரிக்கலாம் என நம்பரை டயல் பண்ணினார்.

‘‘ஹலோ நான் கலிவரதன் பேசறேங்க. உங்க ரோபோ சாஃப்ட்வேர் வாங்கலாம்னு போன் போட்டேங்க. எவ்வளவுங்க?”

“70,000 ரூயாய்... டிரெயினிங் கொடுக்க, தனியா 10,000 ரூபாய்...” கலிவரதன் மொத்தமே 25,000 ரூபாயை வச்சிதான் டிரேட் பண்ண திட்டமிட்டுருக்க, ‘‘அடுத்து யாருக்கு போன் போடலாம்...? அம்புகுறி சாஃப்ட்வேரா?  அல்லது இன்டிகேட்டர் சாஃப்ட்வேரா?” மனதுக்குள் பிங்கி பாங்கி போட்டு பார்த்து,  கடைசியில் இன்டிகேட்டர் சாஃப்ட்வேரை தேர்வு செய்தார். 

“ஹலோ நான் கலிவரதங்க, இன்டிகேட்டர் சாஃப்ட்வேர் பத்தி கொஞ்சம் கேக்கலாம்னு...”

உரையாடல் தொடர்வதற்கு முன், இந்த இன்டிகேட்டர் வியாபாரியின் பூர்வீகம்பற்றி பார்க்கலாம். பெயர் மதன் காமராஜன். எல்லோரும் இவரை சுருக்கமா மதன்னு கூப்பிடுவாங்க. படிச்சது ஹோட்டல் சம்பந்தமான டிப்ளமோ. இவருக்கு படிப்பு சரியா ஏறலை. சரியான வேலையும் கிடைக்கலை. கடைசியா இவருக்கு ஒரு கால்சென்டர் கம்பெனியில ரூ.8,000-க்கு ஒரு வேலை கிடைச்சது. அவருக்கு வாழ்க்கையில லட்சம் லட்சமா சம்பாதிக்க ஆசை. வேலை பார்த்து, இன்கிரிமென்ட் வாங்கி, எப்ப லட்ச ரூபாய் சம்பளத்தை பார்க்கிறது?

ஆள் கில்லாடி. யாரைப் பார்த்தாலும் பல்லைக் காட்டி, கெக்கே பிக்கேன்னு சிரிச்சி காரியம் சாதிச்சி, அந்த ஆளை கழட்டி விடறதில கில்லாடி. ஆனா, ஒரு விஷயத்தில உஷாரா இருந்தார்.  அதாவது, தன் கைகாசு போட்டு எதுவும் பண்ணக்கூடாது. எது பண்றதா இருந்தாலும், அடுத்தவங்க காசுலதான் பண்ணணும். எவானது மாட்டினா, அவனை கீழே அமுக்கிவிட்டு, அவனை வைச்சி மேல வந்திடனும்னு நினைச்சார்.

எந்த ஃபீல்டுல ஈஸியா, நெறைய  பணம் சம்பாதிக்கலாம்னு யோசித்தார். அப்பதான் ஷேர் மார்க்கெட் அவருக்கு ஞாபகம் வந்தது. மக்கள் எல்லாம் பேராசையில வந்து விழாறங்க. இவங்களதான் நாம டார்கெட் பண்ணும்னு முடிவெடுத்தார்.

மார்க்கெட்ல நல்ல பேர் இருக்கிற பங்குச் சந்தை ஆளை புடிச்சி, நாம ஒரு கம்பெனி ஆரம்பித்து டிரைய்னிங் கொடுக்கலாம் சார்னு ஆரம்பித்தார்.   டிவியில விளம்பரம் போட்டுத்தாக்கி நல்லா காசு சேர்த்தார். டிரைய்னிங்க்கு வர்ற ஆளுங்க நின்னு போச்சு. அப்புறம், அந்த டிரைய்னருக்கு தெரியாமலே அவர் வகுப்பை ரெக்கார்ட்  பண்ணி, அதைக் கொஞ்சம் உல்டா பண்ணி, டிவிடி  போட்டு வித்து காசு பண்ணினார். அப்புறம் டிவிடி விக்கிறதும் நின்னு போச்சு. என்ன பண்றதுன்னு யோசிச்சார்.

அந்த சமயத்தில், அவரோட ஐ.டி படிச்ச ஒரு நண்பர் சந்திக்கவே, அடித்தது லக்கி. நண்பரோட அப்பா நல்ல பணக்காரர்.  அந்த ஐ.டி ஆளை வளைச்சி போட்டு, அவர் காசிலேயே ஒரு சாஃப்ட்வேரை டெவலப் பண்ணினார். சாஃப்ட்வேர் வித்தா ஆளுக்குப் பாதி பாதி என டீல். கூடவே குமரன், பாலு என இரண்டு எடுபுடிகளை வைத்திருந்தார். இவங்க வேலையே ஆளுங்களை புடிச்சி சாஃப்ட்வேர் விற்பதுதான். வித்தா இவங்களுக்கு கமிஷன். யாராவது, சாஃப்ட்வேர் பத்தி விசாரிச்ச, இவங்க பைக்ல கிளம்பி, பீட்சா டெலிவரி பண்றவரைவிட வேகமாக போய் ஆளை மடக்கிடுவாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்