Zero to Hero - 8

சாதிக்கும் பிசினஸ்மேன்கள்!ஜெ.சரவணன்புது ஐடியா + நல்ல கூட்டணி = இலக்கில் வெற்றி!

சாதாரண குடும்பத்தில் பிறந்து, பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால் ஈர்க்கப்பட்டு இன்று பல கோடிகளில் டேர்ன் ஓவர் செய்யும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி, குடும்பத்தில் முதல் தலைமுறை தொழிலதிபராக வளர்ந்துள்ள லெப்ராக்ஸ் ரப்பர் லைனிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ நந்தகுமார் தனது வெற்றிப் பயணத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

“1988-ல் தொடங்கப்பட்ட நிறுவனம். 30 வருடங்களைத் தொடப்போகிறது. சந்தையில் இல்லாத ஒரு புதிய தொழிலைத் தொடங்கி அதில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் சவால்களையும் தாண்டி ஒரு நிறுவனத்தை இத்தனை காலமும் காப்பாற்றி வருவது மட்டுமில்லாமல் தொடர்ந்து வளர்ந்து வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என்பதை நான் என்னுடைய அனுபவத்தில் புரிந்துகொண்டேன்.

என்னுடையது மிடில் கிளாஸ் குடும்பம். எனது அப்பா ஷெல் ஆயில் கம்பெனியில் மேனேஜராக இருந்தார். நான் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சென்னையில் லயோலா கல்லூரியில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தேன். பின்னர் ஃபைனான்ஸ் பட்டப் படிப்பு படித்து தேர்ச்சி பெற்று, 10 ஆண்டுகள் மெட்டிரியல் ஹாண்ட்லிங் துறையில் பணிபுரிந்தேன். அது தந்த அனுபவமும், என்னுடைய அறிவியல் அறிவும் பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்க ஊக்கப்படுத்தியது.

அப்போதுதான் இந்தியச் சந்தையில் ரப்பர் லைனிங் தொழில்நுட்பத்திற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரிய வந்தது. நாங்கள் 1988-ல் தொடங்கும்போது ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே அந்தத் தொழிலைச் செய்து வந்தது. எனக்கு அந்தத் தொழிலைச் செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் யோசனையை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு பிசினஸை நடத்தி விட முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்