மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்பெஷல் இன்ஷூரன்ஸ் பாலிசி உள்ளதா?

கேள்வி-பதில்

? மாற்றுத் திறனாளி களுக்குகென்று  தனி இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கிறதா?

ராஜாராம்,

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

“மாற்றுத் திறனாளிகளுக்காக ஜீவன் ஆதார் ஃஹோல் (Jeevan   Adhar-Whole), லைஃப் ஜீவன் விஷ்வாஸ்-எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் (Life Jeevan Vishwas- Endowment Assurance) என்ற இரண்டு பாலிசிகளை எல்ஐசி நிறுவனம் வழங்குகிறது.  இந்த பாலிசிகள் காப்பீடு மற்றும் முதலீடு இணைந்த திட்டங்கள் ஆகும். மாற்றுத் திறனாளிகளுக்காக மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசியை பெரும்பாலான நிறுவனங்கள் வழங்குகின்றன. ஊனத்தின் காரணமாக ஏதாவது நோய் ஏற்பட்டிருந்தால் நிரந்தர விலக்கு அடிப்படையில் க்ளெய்ம் கிடைக்காது. மற்ற நோய்களுக்கு எப்போதும் போல  க்ளெய்ம் கிடைக்கும்.”

? எனக்கு எல் அண்ட் டி லாங் டேர்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்ட்ஸ் 2011 ஏ சீரியஸ் 20 பாண்டுகள்  23.3.2011 அன்று அலாட்மென்ட் செய்யப்பட்டது. இந்த பாண்டுகளின் 5 வருட லாக் இன் பிரீயட் 22.3.2016 உடன் முடிவடைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட பாண்டுகளை விற்று பணமாக்க என்ன செய்ய வேண்டும்? 

ஓ.முரளிதரன்,

த.ராஜன், இயக்குநர்,ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

“இந்தப் பத்திரங்களின்  பை பேக் ஆப்ஷன் ( buy back option) மார்ச் 23, 2016  அன்று முடிவடைந்துவிட்டது. இப்போது விற்று பணமாக்க முடியாது. இந்தப் பத்திரங்களை அடுத்த பை பேக் ஆஃபரில்தான் விற்றுப் பணமாக்க முடியும். அடுத்த பை பேக் ஆஃபர் 22.9.17-ல் வருகிறது. அப்போது உங்களுக்கு நிறுவனத்திலிருந்து திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை அனுப்புவார்கள். அதனுடன் ஒரிஜினல் பாண்ட் சான்றிதழ்கள், உங்கள் வங்கிக் கணக்கு விவரம், முகவரியில் மாற்றம் இருந்தால் அதை படிவத்தில் தெரிவிக்க வேண்டும்.  இந்த பை பேக் ஆஃபரில் சமர்ப்பித்த பிறகு பாண்டுக்கான பணம் 23.3.2018 அன்று உங்களின் வங்கிக் கணக்குக்கு வந்து சேரும். தற்போது ஏதேனும் முகவரி மாற்றம் இருந்தால் அதனை அதன் பதிவாளருக்கு தெரியப் படுத்தவும்.

Share Pro Service (india) Pvt    ltd,13AB, Samhita ware housing    complex, 2nd floor, Sakinaka Telephone exchange lane, off (Anderi- Kurla road), Sakinaka Anderi, Mumbai- 400 072.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்