நிஃப்டி 9000 புள்ளிகள்!

ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிர்வாக இயக்குநர் திராஜ் ரெல்லி சிறப்புப் பேட்டிசி.சரவணன்

லகப் பொருளாதாரம் இன்னும் ஒரு மந்த நிலையிலேயே இருந்து வருகிறது.உலகத்தின் உற்பத்தி மையம் என்று அழைக்கப்படும் சீனாவின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை வளரும் நாடுகளில் முன்னணியில் இருந்தாலும் ஏற்றுமதித் துறை , உற்பத்தித் துறை போன்றவை இன்னும் சுணக்கத்திலேயே உள்ளன.

இதுபோன்ற நிலையற்ற தன்மையில் பங்கு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, சுமார் 18 லட்சம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வரும் ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திராஜ் ரெல்லி நாணயம் விகடன் இதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அவரிடம் நாம் கேட்ட கேள்விகளும் அவர் நமக்கு அளித்த பதில்களும் இனி...  
 
? வழக்கமான பங்குத் தரகு நிறுவனத்துக்கும், உங்களை போன்ற வங்கி சார்ந்த பங்குத் தரகு நிறுவனத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

‘‘ஷேர் டிரேடிங் அக்கவுன்ட், டீமேட் அக்கவுன்ட், பேங்க் அக்கவுன்ட் என அனைத்தையும் எங்களிடமே ஆரம்பிக்கும் வசதி இருக்கிறது. தற்போது மொபைல் அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறோம். மேலும் முதலீட்டு விவரங்களை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் அளித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் குறைந்திருக்கிறது. முதலீட்டாளர்கள் / டிரேடர்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தை பயன்படுத்த முடியாத  சிக்கலான நிலையில் (இயற்கை பேரிடர் காலங்கள்) எங்களின் கால் அண்ட் டிரேட் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.”  

? பங்கு வர்த்தகம் தவிர வேறு என்ன சேவைகள் அளிக்கிறீர்கள்?

“எங்களுக்கு இந்தியா முழுக்க 262 கிளைகள் உள்ளன. இவை 189 நகரங்களில் இயங்கி வருகின்றன. என்பிஎஸ், எஃப்டி, பாண்ட், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யும் சேவையையும் அளித்து வருகிறோம். மேலும், ஆன்லைனில் இ - உயில் (இ -வில்) எழுதி பாதுகாக்கும் வசதியை அளித்து வருகிறோம். ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்குத் தாக்கல் வசதியும் இருக்கிறது. மேலும், இன்ஷூரன்ஸ், கடன் சேவைகளையும் அளிக்கிறோம்.

? கடந்த 5 ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை பெரிதாக அதிகரிக்கவில்லை. இதனை அதிகரிக்க நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

பதில்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி மத்தியில் வந்த பிறகு பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு மூன்று லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக எங்களிடம் சேர்ந்து வருகிறார்கள். கடந்த 12 மாதங்களில் வந்த புதிய பங்கு வெளியீடுகளில் (ஐபிஓ) சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு கூட்டங்கள் மூலம் பங்குச் சந்தைக்கு சிறு முதலீட்டாளர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்திருக்கிறோம்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்