தொழில் பாதுகாப்புக்கு கைகொடுக்கும் எஸ்எம்இ இன்ஷூரன்ஸ்!

ஜெ.சரவணன்

வாழ்வாதாரத்துக்கு தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள்(எஸ்எம்இ) எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை ‘நிதி’ ஆதாரம்தான். எந்தவொரு தொழிலிலும் வெற்றியடைய வேண்டுமென்றால் நிதி நிலைமை, எப்போதும் நிலையாக இருப்பது மிக முக்கியம்.

அதற்கு உதவக்கூடிய ஒன்று இன்ஷூரன்ஸ். பொதுவாகவே அனைத்து பிசினஸ்களுக்கும் இன்ஷூரன்ஸ் அவசியம். அதிலும் எதிர்பாராத பேரிழப்புகளைத் தாங்குவதற்கு எஸ்எம்இகளுக்கு இன்ஷூரன்ஸ் மிக மிக அவசியம்.

ஏனெனில் எஸ்எம்இ்கள் பெரும்பாலும் சொத்துகளை விற்றோ கடன் வாங்கியோ தொழில் தொடங்குகிறார்கள். நஷ்டத்தைத் தவிர்த்து தொடர் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. எனவே எஸ்எம்இகளுக்கு இன்ஷூரன்ஸ் எந்தளவுக்கு முக்கியம் என்பதையும், எஸ்எம்இ இன்ஷூரன்ஸை பொறுத்தவரை என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதையும் பிர்லா சன்லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் எஸ்எம்இ பயிற்றுநர் விஜய்குமார் சிலிகுரி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ஒரு நிறுவனத்தின் முதலாளி், அவரின் குடும்பம், ஊழியர்கள், அவர் தம் குடும்பங்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரையும் இணைக்கும் விஷயம்தான் இன்ஷூரன்ஸ். எனவே ஒரு பிசினஸ் பாதிக்கப்பட்டால் யார் யாருக்கெல்லாம் பாதிப்பு வருமோ அவர்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான இன்ஷூரன்ஸ் பாலிசிகள்தான் இவர்கள் அனைவரின் நிதி சார்ந்த பாதுகாப்பையும் எதிர் காலத்தையும் உறுதி செய்யும்.

யாருக்கு என்ன இன்ஷூரன்ஸ்?

என்ன பிசினஸ், முழு ஓனரா, பார்ட்னர்ஷிப்பா, மதிப்பு மற்றும் முதலீடு எவ்வளவு, எதிர்கால தேவை, ரிஸ்க் ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொன்றிற்குமான இன்ஷூரன்ஸ் பாலிசி, பிரீமியம் வேறுபடும். எந்தவொரு இன்ஷூரன்ஸ் நிறுவனமாக இருந்தாலும், இதுதான், இவ்வளவுதான் பிரீமியம் என்று கூறினாலோ, அட்டவணையாக வழங்கினாலோ உஷாராக இருங்கள். எப்படி மருத்துவர் நோயாளிகளைச் சோதிக்காமலேயே மருந்துகளைப் பரிந்துரைக்க முடியாதோ, அப்படித்தான் இன்ஷூரன்ஸும் அதற்கான பிரீமியமும். நிறுவனத்தை பார்வையிடாமல், அது பற்றிய விவரங்கள் தெரியாமல் முடிவு செய்வது தவறாகும்.

ஒரு எஸ்எம்இ தன்னுடைய 10 கோடி ரூபாய் பொருள் அபாயத்தில் இருக்கிறது என்றால், அதில் ரூ. 10 லட்சத்துக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் எடுப்பது என்பது சரியான முடிவு அல்ல. இன்ஷூரன்ஸின் பலன், எடுப்பவரின் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். தனிநபர் தேவைகளுக்கான இன்ஷூரன்ஸ், பிசினஸ் தொடர்பான ரிஸ்க்குகளுக்கு இன்ஷூரன்ஸ், சொத்துகளுக்கான இன்ஷூரன்ஸ் என தேவைகள் சார்ந்து இன்ஷூரன்ஸ்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

கீமென் மற்றும் பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ்!

நிறுவனரோ அல்லது அதி முக்கிய ஊழியரோ, அவரால் ஓரு பிசினஸ்க்கு ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக எடுக்கப்படும் இன்ஷூரன்ஸ் கீமென் இன்ஷூரன்ஸ். இந்த இழப்பு அந்த நபர் இறந்தாலோ அல்லது பிசினஸில் இருந்து வெளியேறினாலோ ஏற்படலாம். பார்ட்னர்ஷிப்பில், ஒரு பார்ட்னர் இறக்க நேரிட்டாலோ அல்லது பிசினஸை விட்டு வெளியேறினாலோ பார்ட்னர்களின் குடும்பத்திற்கு எந்தப் பிரச்னையும் வராமல் இருக்கும் வகையில் பார்ட்னர்ஷிப் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்