நாணயம் லைப்ரரி: உங்கள் வளர்ச்சிக்கு வித்திடும் 15 விதிமுறைகள்!

புத்தகத்தின் பெயர் : த 15 இன்வேல்யூபிள் லாஸ் ஆஃப் குரோத் (The 15 Invaluable Laws of Growth)

ஆசிரியர்  : ஜான் சி மேக்ஸ்வெல் (John C Maxwell)

பதிப்பாளர் : Hachette Book Group USA

ஜான் சி மேக்ஸ்வெல் எழுதிய ‘த 15 இன்வேல்யூபிள் லாஸ் ஆஃப் குரோத்’  எனும் தனி மனித வளர்ச்சிக்கான பதினைந்து சட்டதிட்டங்களைச் சொல்லும் புத்தகம் குறித்துப் பார்ப்போம்.ஆற்றல் என்ற சொல் எல்லா மொழிகளிலுமே பிரம்மிப்பான ஒரு சொல்லாகும்.

நம்பிக்கையை வளர்க்கக் கூடிய, வெற்றிக்கு உறுதியளிக்கிற வார்த்தை அது. ஒரு மனிதனாக உங்களுடைய ஆற்றல் எவ்வளவு என்று எண்ணிப்பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். என்ன ஒரு பாசிட்டிவ்வான எண்ணம் அந்த வேளையில் வருகிறது.

உங்களுடைய உபயோகிக்கப் படாத ஆற்றல் எவ்வளவு இருக்கும் எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்? ஆற்றலுக்கு எதிர் மறை வார்த்தை உபயோகிக்கப் படாத ஆற்றல் இல்லையா? மனிதன் தன் மனதில் நினைப்பதை செய்து முடிக்கத் தேவையான ஆற்றலை உள்ளடக்கியவன். ஏதாவது ஒரு காரணத்தினால் அவன் நினைத்த காரியத்தை முடிக்க முடியாமல் போனால் அவனுக்குள் இருக்கும் அதற்குண்டான ஆற்றலே உபயோகிக்கப்படாத ஆற்றல்.

வளர்ச்சி என்றால் என்ன? உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்ள சுய விழிப்பு உணர்வை வளர்க்கவேண்டும். சிறந்த மனிதனாக மாற உங்களுடைய நடவடிக்கைகளை சிறப்பானதாக நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். உங்களுடைய பணியிடத்தில் உயர்வுபெற உங்களுடைய வேலைத்திறனை வளர்க்க வேண்டும். நல்லதொரு குடும்ப அங்கத்தினராகவும், நல்லதொரு நண்பனாகவும் திகழ உறவுகளை வளர்க்க வேண்டும். உங்களுடைய நிதி நிலைமையை மேம்படுத்தவும் பண ரீதியான இலக்குகளை அடையவும் பணம் குறித்த விழிப்பு உணர்வும் அதுகுறித்த அறிவையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். உங்கள் ஆன்மாவை மேம்படுத்த நீங்கள் உங்கள் ஆன்மீக செயல்பாடுகளை வளர்க்க வேண்டும். இதுபோல பல்வேறு மனிதர்களின் நோக்கங்களுக்கும் இலக்கு களுக்கும் ஏற்றாற்போல் வளர்ச்சி என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிற ஒரு விஷயம். ஆனால் அந்த வளர்ச்சிக்குத் தேவையான வரைமுறைகள் ஒரே மாதிரியானவைதான்.

இந்தப் புத்தகம் எப்படி ஒரு சரியான வளர்ச்சிப் பாதையில் செல்வது என்பதற்கான பதினைந்து விதிகளைச் சொல்கின்றன என்கிறார் ஆசிரியர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்