ஈஸியாகச் செய்யலாம் இன்கம் டாக்ஸ் இ-ஃபைலிங்!

லதா ரகுநாதன், ஆடிட்டர், எல்ஆர் அசோசியேட்ஸ், சென்னை.

டந்த இதழில் வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான படிவங்கள், மாறுதல்கள் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் மின்னணு வரிக் கணக்கு (இ - ஃபைலிங்) பற்றி விரிவாகப் பார்ப்போம். இது மிக முக்கியமான பகுதி. இ - ஃபைலிங் (E filing) வசதியினால், நமக்கு வசதியான நேரத்தில், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யமுடியும்.

முன்பெல்லாம் மணிக்கணக் காக இன்கம் டாக்ஸ் ஆஃபீசில் ஸ்பெஷல் கவுன்டர்களில் நின்று நொந்த நாட்கள், இனிமேல் இல்லை - அதெல்லாம் மலையேறிவிட்டது.

கடைசி தேதியில் இரவு 12 மணிக்குக் கூட உங்கள் வீட்டில் இருந்தபடியே ரிட்டர்னை ஃபைல் செய்ய முடியும்! அதற்காக அது வரைக்கும் காத்திருக்க தேவை இல்லை.

இதற்கு http://incometaxindiaefiling.gov.in/ என்ற இணைய தளத்துக்கு (web site) க்குள் சென்று மேலே குறிப்பிட்டுள்ள குயிக் இ ஃபைலிங் (quick e filing)  ஐ க்ளிக் செய்ய வேண்டும். இதற்கு உங்களின் பான் எண் தேவை. இதுதான் உங்களின் யூசர் ஐடி. இத்துடன்  நீங்களே கொடுக்கும் பாஸ்வேர்ட், பின் உங்கள் பிறந்த தேதியும் கொடுத்தால், அங்கே காட்டப்படும் கோட் நம்பரையும் (கேப்பிட்சா) தந்தால் நீங்கள் உள்ளே நுழைந்து விடுவீர்கள்.

இப்போது முதலில் செய்ய வேண்டியது உங்களின் படிவம் 26ஏஎஸ்(Form 26AS) ஐ பார்க்க வேண்டும். இதன் நோக்கம் உங்களிடமிருந்து பிடிக்கப்பட்ட டிடிஎஸ், சரியாக காட்டப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது. சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் குயிக் இ ஃபைலிங்க்கு செல்லலாம். இந்த வசதி நீங்கள் நிரப்ப வேண்டிய படிவம் ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 4எஸ்  ஆக இருந்தால் மட்டுமே. அப்படி அல்லாமல் ஐடிஆர் 2 அல்லது  ஐடிஆர்4ஆக இருந்தால் நீங்கள் டவுன்லோடு ஆப்ஷன் -க்கு சென்று சரியான படிவத்தை தர விறக்கம் செய்ய வேண்டும்.

குயிக் இ ஃபைலிங் என்னும்போது நீங்கள் உங்கள் மதிப்பீட்டு ஆண்டு (Assessment year) தேர்வு செய்து பின் கேட்கப் படும் கேள்வி -  டேடா பேஸ்  அல்லது முந்தையை ஆண்டின் வருமான வரி கணக்காக அல்லது புதிதாக ஒன்றா ... இதில் ஒன்று தேர்வு செய்யவேண்டும்.முதல் இரண்டு தேர்வு செய்தால் பாதி விவரங்கள் தாமாகவே பூர்த்தி செய்யப்பட்டுவிடும். நிரப்பப் படாத சிவப்புக்குறி காண்பிக்கும் விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்யவேண்டும். எல்லா சிவப்பு குறியிட்ட விவரங்களும் பூர்த்தி செய்யப்படாவிட்டால் ரிட்டர்ன் அப்லோட் செய்ய முடியாது குயிக் இ ஃபைல் செய்யாமல், படிவம் தரவிறக்கம் செய்து பண்ணும்போது, இதே போல் பூர்த்தி செய்யவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை எக்ஸ் எம்எல் (XML) என்னும் ஃபார்மெட் இல் சேவ் (save) செய்து அதை அப்லோட் செய்யவேண்டும். குயிக் இ ஃபைல் செய்யும்போது இது தேவை இல்லை. நேரடியாக அப்லோட்  ஸ்க்ரீன் வரும். அதை க்ளிக்கினால் போதும்.

இந்த வகையில் அப்லோட் செய்யப்பட்ட படிவங்களில் உங்கள் டிஜிட்டல் கையெழுத்து இருக்காது. ஆகையால் நீங்கள்தான் இந்தப் படிவத்தை சமர்ப்பித்தீர்கள் என்பதற்கு ஒரே ஆதாரமாகிறது ஐடிஆர் 5 (ITR 5). இதனை அனுப்புவதற்கு சில வழிகள் உள்ளன

1. ஆதார் அட்டை வழி : இதற்கு நீங்கள் உங்கள் ஆதார் அட்டை எண்ணை, வருமான வரியுடன் லிங்க் செய்திருக்க வேண்டும்.அப்லோட் செய்த வுடன் ஒரு  ஒன் டைம் பாஸ்வேர்ட் உங்களுக்கு அனுப்பப்படும். இதை வைத்து உங்கள் ஐடிஆர்- ஐ நீங்கள் சரி பார்க்க முடியும். தனியாக  ஐடிஆர் 5 எடுத்து அனுப்ப வேண்டாம். இந்த இவிசி (EVC -electronic Verification code) ஆதார் வழியாக சரி பார்க்கும்போது ஐந்து நிமிடங்களுக்கே செல்லு படியாகும்.

2. வருமான வரியின் இ ஃபைலிங் வலைதளம் வழியாக இவிசி செய்வதற்கு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த இவிசி கோட் உங்கள் மொபைல் நம்பர் அல்லது இமெயிலுக்கு வரும் இந்த கோட் 72 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்