கேட்ஜெட்ஸ்

கார்த்தி

ஏசர் ப்ரிடேட்டர்15 லேப்டாப் (Acer Predator 15 Laptop)

இளைஞர்கள் கேமிங் லேப்டாப்கள் பக்கமாக தங்கள் கவனத்தை திருப்புவதால், நிறுவனங்களும் விலையைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், சிறந்த திறன்மிக்க லேப்டாப்களை சந்தையில் இறக்குகிறார்கள். ஏசர் நிறுவனம் என்றாலே, பட்ஜெட் லேப்டாப்கள் தான் நம் மனக்கண்ணில் தோன்றும், அதை பொய்யாக்கும் விதத்தில், அதிக விலை லேப்டாப்பை சந்தையில் இறக்குகிறது ஏசர். சிறந்த கேமிங் திறனுக்காக ஏசர் நிறுவனம் ப்ரிடேட்டர் என்ற பெயரில் லேப்டாப்களை களம் இறக்கி இருக்கிறது.

சிக்ஸ்த் ஜெனரேசன் I7 2.6GHz பிராசஸர், 32 ஜிபி ரேம், விண்டோஸ் 10  Nvidia 980M 8 ஜிபி கிராபிக்ஸ், 256ஜிபி SSD, 1 டிபி ஹார்ட் டிஸ்க்  என கேமிங் பிரியர்களுக்கு ஏற்றார் போல் இதனை டிசைன் செய்து இருக்கிறார்கள். கேமிங் லேப்டாப் என்பதால், கீ போர்டும் அதற்கு ஏற்றார் போல், வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எஸ்கேப், F1 வரிசைக்கு மேலே, இன்னொரு சிறு வரிசையில் சில பட்டன்களை அணிவகுத்து இருக்கிறது ஏசர்.  கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் ஸ்லாட்டுகள் மூலம் மேலும் 32 ஜிபி வரையில் ரேமை அதிகரிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்