ஐபிஓ வந்து கலக்கும் எஸ்எம்இ நிறுவனங்கள்!

மு.சா.கெளதமன்

பொதுவாக எஸ்எம்இ நிறுவனங்கள் விரிவுபடுத்திக் கொள்வதற்கும், புதிய தொழில் நுட்பங்களை அப்டேட் செய்து கொள்வதற்கும் தேவையான நிதியை வங்கிக் கடன்கள் மூலமாகவோ அல்லது, பங்குச் சந்தை மூலமாகவோ திரட்டுகிறார்கள். இவ்வாறு பங்குச் சந்தை மூலம் நிதி திரட்டி பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள எஸ்எம்இ நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு லாபம் வழங்கி இருக்கிறது எனப் பார்ப்போம்.

கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கி இதுவரை பிஎஸ்இ எஸ்எம்இ பிளாட்பாரத்தில் 138 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. இதில் 18 நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு பிஎஸ்இ மெயின் போர்டு என்றழைக்கப்படும் பிஎஸ்இ- க்கு மாறி இருக்கின்றன.

லாபத்தில் எஸ்எம்இ-க்கள்!


பட்டியலிட்டதிலிருந்து 24 நிறுவனப் பங்குகள் 50 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் ஈட்டியிருக்கின்றன. டாப்  20 வருமானம் கொடுத்த நிறுவனங்களின் பட்டியலை அடுத்தபக்கமுள்ள அட்டவணையில்  பார்க்கலாம்.

ஆண்டு வாரியாக பட்டையைக் கிளப்பிய எஸ்எம்இ பங்குகள்!

ஆண்டுக் கணக்கில் பார்த்தால் 2013-ல் வெளிவந்த 27 ஐபிஓக்களின் சராசரி வருமானம் -13.6 சதவிகிதமாக இருப்பது கவலை அளிக்கிறது, இருப்பினும் 2014-ல் வெளிவந்த 21 ஐபிஓ-களின் சராசரி வருமானம் 114 சதவிகித மாகவும், 2015-ல் வெளிவந்த 26 ஐபிஓ-களின் சராசரி வருமானம் 47.95 சதவிகிதமாக இருப்பது எஸ்எம்இ-களின் நிலையான வளர்ச்சியை உணர முடிகிறது. மேல் குறிப்பிட்ட வருமானங்கள் எல்லாம் ஐபிஓ வெளியான ஆண்டிலிருந்து 6 ஜூன் 2016 வரை கணிக்கப்பட்டிருக்கிறது.

லாபம் தந்த செக்டார் பங்குகள்!


கடந்த நான்கு ஆண்டுகளில் வாகனம், வங்கி மற்றும் நிதி சேவைகள், சிமென்ட் மற்றும் கட்டுமானம், பொறியியல் மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ், ஃபுட் அண்ட் பீவரேஜஸ், மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, மெட்டல் மற்றும் சுரங்கம், ரீடெயில் மற்றும் ரியல் எஸ்டேட், மற்ற துறைகள், சேவைகள் என்று 13 துறைகளுக்கு கீழ் இந்த நிறுவனப் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

அதில் பட்டியலிடப்பட்ட தேதியிலிருந்து ஜூன் 6, 2016 வரையான காலகட்டங்களில் பங்குகள் கொடுத்திருக்கும் வருமானத்தின்படி சேவைத் துறை சராசரியாக 240% வருமானத்தையும், மெட்டல் மற்றும் சுரங்கத் துறை நிறுவனப் பங்குகள் சராசரியாக 236% சதவிகித வருமானத்தையும் கொடுத்திருக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவதாக ஃபுட் அண்ட் பீவரேஜஸ் துறையும், தகவல் தொழில்நுட்பத் துறையும் முறையே 56% மற்றும் 52% சதவிகித வருமானங்களைக் கொடுத்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்