வீட்டை அழகாக்கும் இன்டீரியர் பிசினஸ்!

லாபம் தரும் தொழில்கள்!த.சக்திவேல்

ன்றைக்கு பலரின்  கனவுகளில் முக்கியமாக இருப்பது அழகான சொந்த வீடு தான். முன்பெல்லாம்  வீட்டைக் கட்டினோமா , உறவினர்கள். நண்பர்களை அழைத்து புதுமனை புகுவிழா நடத்தி  பால் காய்ச்சினோமா. குடி புகுந்தோமா என்று இருப்போம். ஆனால் இன்றைக்கு  அப்படியில்லை.

நமது கனவு இல்லத்தைப் பற்றி பலவிதமான விருப்பங்கள் இருக்கிறது. எல்லாவற்றிலும் புதுமை மற்றும் வித்தியாசத்தை விரும்புகிறோம். படுக்கையறை, பூஜை அறை, சமையலறை இப்படித்தான் இருக்க வேண்டும்,  குளியலறைக்கு இந்த வகையான டைல்ஸ் போட வேண்டும். ஹாலுக்கு இந்த வண்ணத்தில் பெயின்ட் அடிக்க வேண்டும், வாசல் கதவும், ஜன்னலும் இந்த மரத்தில் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் நண்பர்களின் வீடு, ஹோட்டல் அல்லது வேறு இடங்களுக்கு செல்லும்போது நம்மையும் அறியாமல் அந்த இடத்தின் உள் அலங்காரங்கள் நம்மைக் கவர்கிறது. நாமும் வீடு கட்டும் போது  இதேமாதிரி இன்டீரியர் டெக்கரேஷன் செய்ய வேண்டும் என ஆசைப் படுகிறோம்.

இப்போதெல்லாம் வீட்டைக் கட்ட செய்கிற செலவுகளைவிட இன்டீரியர் டெக்கரேஷன் செய்வதற்காக அதிகமாக செலவு செய்ய தயாராக இருக்கிறோம்.  வீடுகள் மட்டுமின்றி ஹோட்டல் கள், அடுக்குமாடி குடியிருப்புகள்,   ஷாப்பிங் மால்கள், கடைகள், அலுவலகங்கள், மருத்துவ மனைகள் என்று இன்டீரியர் டெக்கரேஷன் தொழிலுக்கான வாய்ப்புகள் பெருகி கிடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்