கல்விக் கடன்... கொடுக்கல் வாங்கலில் என்ன சிக்கல்?

பாசுதேவ்

மீபத்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கலான ஒரு வழக்கு கொஞ்சம் யோசிக்க வைக்கக்கூடியது. அரசுடமை வங்கி ஒன்றில் கல்விக் கடன் பெற்று பொறியியல் படித்துள்ள மாணவர் ஒருவர் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ‘கடன் பெற்று சரிவர திருப்பிச் செலுத்த தவறியவர்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் என்னைப் போன்ற ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்விக் கடன் பெற்றவர்கள் படிப்பை முடித்து 12 மாதத்துக்குள் அல்லது பணியில் சேர்ந்த 6 மாதத்துக்குள் தவணைத்தொகை செலுத்த வேண்டும் என நிபந்தனைகள் உள்ளன. என்னைப் போன்ற சில மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதில் சிக்கல் உள்ள சூழலில், வங்கிப் பணிக்கான தேர்வில் பங்கேற்க தடை விதித்திருப்பது அடிப்படை உரிமையைப் பறிக்கக்கூடியது. கல்விக் கடன் பாக்கி வைத்துள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என மனுவில்  சொல்லியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இது ஒரு சின்ன உதாரணம்தான். இதுபோல கல்விக் கடன் கொடுக்கல் வாங்கலில் ஏராளமான  சிக்கல்கள் உள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்