ஷேர்லக்: கிங்ஃபிஷர் வழியில் வீடியோகான்!

மாலை நேரத்தில் சென்னையில் மழை பெய்யலாம் என வானிலை அறிக்கை செய்தியைப் படித்த ஷேர்லக் உஷாராக மழை கோட்டைக் கையோடு கொண்டு வந்திருந்தார். அவரை வரவேற்று, சூடான ஏலக்காய் டீ தந்தபடி பேசத் தொடங்கினோம். 

‘‘டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 52 வார உச்சத்தைத் தாண்டி இருக்கிறதே?’’ என நமது முதல் கேள்வியைக் கேட்டோம்

‘‘ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் விற்பனை மே மாதத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததே இதற்கு காரணம். மேலும், இந்தக் குழுமத்தின் இன்னொரு நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் ரூ.1,400 கோடிக்கு ஐபிஓ வர இருக்கிறது. இது போதாதா, அந்தப் பங்கின் விலை ஏற...?’’ என்று நம்மிடம் திரும்பக் கேட்டார்.

‘‘கடந்த 9 மாதத்தில் இல்லாத அளவுக்கு இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை இறக்கம் கண்டிருக்கிறதே?’’ என்றோம் கொஞ்சம் வருத்தத்துடன்.

‘‘ரீடெய்ல் செலவு குறைவு, எரிசக்தி மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் வருமானம் குறைந்துள்ளதால் அவை தொழில்நுட்பத்தை மேம்படுத்த செலவிடுவது குறையும் என்பதால் இன்ஃபோசிஸ் பங்கு விலை கடந்த வியாழனன்று மட்டும் 4.27% இறக்கம் கண்டது. மேலும், நடப்புக் காலாண்டில் சம்பள உயர்வு, விசா கட்டணம் போன்றவற்றால் இந்த நிறுவனத்தின் செலவு அதிகரித்து, நிகர லாபம் குறையும் என்கிற கணிப்பாலும் பங்கின் விலை இறங்கி உள்ளது. ஜூன் காலாண்டில் இதன் லாப வரம்பு 2% குறையக்கூடும். அதே நேரத்தில், முழு நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது’’ என்றார். இந்தப் பங்கில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டினை தொடர்ந்து கவனிப்பதே நல்லது என்றேபடுகிறது.

‘‘வங்கிகளின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் விட்டுவிட்டார் ஆர்.பி.ஐ. கவர்னர். அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா?’’ என்று சந்தேகத்துடன் கேட்டோம்.

‘‘கோல்டுமேன் சாக்‌ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜூலை மாதம் அமெரிக்காவில் வட்டி விகித உயர்வுக்கு 40% வாய்ப்பு தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. அந்த வகையில் இப்போதைக்கு அமெரிக்காவில் வட்டி விகித உயர்வுக்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும்’’ என்று சிறு விளக்கம் தந்தார்.

‘‘வீடியோகான் நிறுவனம் கரெக்டிவ் ஆக்‌ஷன் பிளானில் இறங்கக் காரணம்?’’ என்று விசாரித்தோம்.

‘‘கிங்ஃபிஷர் போலவே வீடியோகானும் ஆகிவிடுமோ என்று வங்கிகள் பயப்பட ஆரம்பித்ததுதான். வங்கிகளுக்கு வீடியோகான் தரவேண்டிய கடன் தொகை ரூ.43 ஆயிரம் கோடி. சில ஆண்டுகளாகவே வீடியோகான் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, கேர் (கிரெடிட் அனாலிசிஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம்) வீடியோகானுக்கான கிரெடிட் ரேட்டிங்கைக் குறைத்துள்ளது.

2012-ல் வெளியான கிரெடிட் சூயீஷ் அறிக்கையின்படி, அதிக கடன் சுமையுள்ள டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் வீடியோகான் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், நிதி நிலைமை மோசமாக உள்ள வீடியோகான் வங்கிகளுக்கு தர வேண்டிய கடனைத் திருப்பித் தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2015 மார்ச் காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ.10.46 கோடியாக இருந்தது. ஆனால், 2016 மார்ச் மாத காலாண்டில் ரூ.189.59 கோடி நஷ்டமடைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்